அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஈரோடு ம.தி.மு.க., வேட்பாளர் செலவு ரூ.60 லட்சம் தானாம்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement
ஈரோடு ம.தி.மு.க., வேட்பாளர் செலவு ரூ.60 லட்சம் தானாம்

ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி 60 லட்சம் ரூபாய் தேர்தல் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு லோக்சபா தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி அ.தி.முக. - மணிமாறன் அ.ம.மு.க. - செந்தில்குமார் மக்கள் நீதி மையம் - சரவணகுமார் உட்பட 20 பேர் போட்டியிட்டனர். ஜூன் ௧௦க்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

பெரும்பாலானோர் ஓட்டுப்பதிவு நாளான ஏப். 18 வரையிலான செலவு கணக்கை ஏப். 25க்குள் தாக்கல் செய்து விட்டனர். அதன்பின் காங்கேயம் சட்டசபை தொகுதியில் ஒரு ஓட்டுச்சாவடியில் மறுதேர்தல் நடந்தது. இதனால் மே 30ல் சிலர் கணக்கு தாக்கல் செய்தனர். இதில் ம. தி.மு.க. வேட்பாளர் 60 லட்சம் ரூபாய் அ.தி.மு.க. வேட்பாளர் 58 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து வேட்பாளர்களும் உரிய ஆவணங்கள் ரசீதுகளுடன் கணக்கை தாக்கல் செய்து விட்டனர். ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிகளின், தேர்தல் கணக்கு பார்வையாளராக பிரதான், குமாரபாளையம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளின், தேர்தல் கணக்கு பார்வையாளராக சசிகாந்த் பணிபுரிந்தனர். இவர்கள் வரும், 17ம் தேதி ஈரோடு வருகின்றனர். கணக்குகளை தணிக்கை செய்து, ஓரிரு நாளில் ஒப்புதல் வழங்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூன்-201916:03:43 IST Report Abuse
Endrum Indian கணக்கு செய்து பார்த்தால் ஒரு ஓட்டுக்கு ரூ 7 கொடுத்ததாக வருகின்றது???அதுக்குத்தான் ஜெயிக்கவில்லை???நம்ம டாஸ்மாக் நாட்டு மக்களுக்கு குறைந்தது ரூ 5000 ஒரு வோட்டுக்கு கொடுத்தால் தான் அதை காசு என்று பார்ப்பார்கள்???இதெல்லாம் சே சே சொல்லவே வெட்கம் வெட்கமாக இருக்கின்றது????
Rate this:
Share this comment
Cancel
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
12-ஜூன்-201910:50:09 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . ops மகன் எவ்வளவு கோடிகள் செலவு செய்தார் என்று உங்களால் கணக்கெடுக்க முடியுமா ? இந்தமுறை பணத்தை இழப்பதற்கு பதிலாக நிறைய இடங்களில் பதுக்கிய அதிமுக அமைச்சர்கள் MLA களால் தான் படுதோல்வின்னு சொல்றானுங்க .
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
12-ஜூன்-201909:04:12 IST Report Abuse
சுந்தரம் இவர் மதிமுக வேட்பாளர் இல்லை. முறைப்படி திமுகவில் சேர்ந்து திமுக வேட்பாளராக திமுக சின்னத்தில்தான் போட்டியிட்டார்.
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
12-ஜூன்-201921:02:12 IST Report Abuse
VELAN Sஇவ்வளவு பணத்தையும் இவர் சீக்கிரமா சம்பாதிக்கணுமே என்று எனக்கு ஒரே கவலையா இருக்கு . மக்களுக்கு சேவை செய்வது என்ற ஒன்று இருக்கிறதே அதை என்ன செய்ய , அதை தூக்கி அடுப்பில போடுங்க, அதான் எலக்சன்தான் முடிஞ்சு போச்சே , இனி கலக்சன்தான் முக்கியம் , எப்படிப்பட்ட தமிழ்நாட்டில் நாம் இருக்கிறோம் , இதை மக்கள் உணர்வார்களா ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X