ஈரோடு ம.தி.மு.க., வேட்பாளர் செலவு ரூ.60 லட்சம் தானாம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஈரோடு ம.தி.மு.க., வேட்பாளர் செலவு ரூ.60 லட்சம் தானாம்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (7)
ஈரோடு ம.தி.மு.க., வேட்பாளர் செலவு ரூ.60 லட்சம் தானாம்

ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி 60 லட்சம் ரூபாய் தேர்தல் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு லோக்சபா தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி அ.தி.முக. - மணிமாறன் அ.ம.மு.க. - செந்தில்குமார் மக்கள் நீதி மையம் - சரவணகுமார் உட்பட 20 பேர் போட்டியிட்டனர். ஜூன் ௧௦க்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

பெரும்பாலானோர் ஓட்டுப்பதிவு நாளான ஏப். 18 வரையிலான செலவு கணக்கை ஏப். 25க்குள் தாக்கல் செய்து விட்டனர். அதன்பின் காங்கேயம் சட்டசபை தொகுதியில் ஒரு ஓட்டுச்சாவடியில் மறுதேர்தல் நடந்தது. இதனால் மே 30ல் சிலர் கணக்கு தாக்கல் செய்தனர். இதில் ம. தி.மு.க. வேட்பாளர் 60 லட்சம் ரூபாய் அ.தி.மு.க. வேட்பாளர் 58 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து வேட்பாளர்களும் உரிய ஆவணங்கள் ரசீதுகளுடன் கணக்கை தாக்கல் செய்து விட்டனர். ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிகளின், தேர்தல் கணக்கு பார்வையாளராக பிரதான், குமாரபாளையம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளின், தேர்தல் கணக்கு பார்வையாளராக சசிகாந்த் பணிபுரிந்தனர். இவர்கள் வரும், 17ம் தேதி ஈரோடு வருகின்றனர். கணக்குகளை தணிக்கை செய்து, ஓரிரு நாளில் ஒப்புதல் வழங்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X