சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சை பேச்சு இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

Added : ஜூன் 11, 2019
Share
Advertisement
தஞ்சாவூர் : மன்னன் ராஜராஜ சோழன் குறித்து இழிவாகப் பேசியதாக, திரைப்பட இயக்குனர், ரஞ்சித் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர், திருப்பனந் தாளில், நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர், உமர் பாரூக்கின் நினைவு நாள் பொது கூட்டம், 5ம் தேதி நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர், ரஞ்சித் பேசியதாவது:டெல்டாவில், ஜாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

தஞ்சாவூர் : மன்னன் ராஜராஜ சோழன் குறித்து இழிவாகப் பேசியதாக, திரைப்பட இயக்குனர், ரஞ்சித் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர், திருப்பனந் தாளில், நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர், உமர் பாரூக்கின் நினைவு நாள் பொது கூட்டம், 5ம் தேதி நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர், ரஞ்சித் பேசியதாவது:டெல்டாவில், ஜாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. மன்னர் ராஜராஜ சோழன் காலம் தான், பொற்காலம் என்பர். ஆனால், ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான், இருண்ட காலம் என, நான் சொல்கிறேன்.எத்தனையோ பேர் சொல்றாங்க. ராஜராஜ சோழன், எங்கள் ஜாதி என்று. சத்தியமாக சொல்றேன்;

ராஜராஜ சோழன், என் ஜாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில், எங்களது நிலம் பறிக்கப்பட்டது, ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் தான்.ஜாதி ரீதியாக, மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது, அந்த ஆட்சிக்காலத்தில் தான்.இவ்வாறு, அவர் பேசினார்.இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. ரஞ்சித் மீது, ஹிந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர், பாலா, திருப்பனந்தாள், போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளைத் துாண்டுதல், கலகம் செய்யும் வகையில் பேசுவது என, இரண்டு பிரிவுகளில், ரஞ்சித் மீது, நேற்று திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X