சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடிப்படியில் தவறி விழுந்த மாணவி பலி

Added : ஜூன் 11, 2019
Advertisement

திருச்சி : பள்ளியின் மாடிப்படியில் விளையாடி, தவறி விழுந்த மாணவிக்கு, உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி, உறையூரில் உள்ள டாக்டர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் பெயின்டர், ராம்குமார். இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு, இலக்கியா, 13, என்ற மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

இலக்கியா, உறையூரில் உள்ள, மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். 7ம் தேதி, மதிய உணவு இடைவேளைக்கு பின், பள்ளிக் கட்டடத்தின் மாடிப்படி கைப்பிடி சுவரில், இலக்கியா சறுக்கி விளையாடினார். அப்போது, தவறி விழுந்து மயங்கினார்.மாணவியின் தலையில் பலத்த அடிபட்டதை அறியாத பள்ளி ஆசிரியர்கள், மாணவியை, பல மணி நேரம் தாமதமாக, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி, நேற்று காலை இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் என, 100க்கும் மேற்பட்டோர், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.பள்ளியின் நுழைவு வாயில் கதவுகளை மூடி, பள்ளி நிர்வாகத்தினர் வெளியே வராததால், பெற்றோர் மற்றும் பொதுமக்கள், உறையூர் பிரதான சாலையில், மறியல் செய்ய முயன்றனர்.

போலீசார் வந்து பேச்சு நடத்தினர்.உரிய விசாரணை நடத்தி, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதி அளித்ததால், மூன்று மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X