சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நுாற்பாலையில் தீ விபத்து

Added : ஜூன் 11, 2019
Share
Advertisement

பெ.நா.பாளையம் : தனியார், நுாற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 லட்சம் ரூபாய்மதிப்பிலான, பஞ்சு பொதி மற்றும் இயந்திரங்கள்நாசமாகின.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஓலப்பாடி சாலை, பனையேரி அருகே, சி.கே.ஆர்., நுாற்பாலை உள்ளது. அதை, நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையத்தைச் சேர்ந்த, ராஜேந்திரன் என்பவர், வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.நேற்று காலை, 9:30 மணிக்கு, 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நுால் நுார்த்தல், பஞ்சு பொதி சரி பார்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென, வெடிசத்தம் கேட்டதோடு, பஞ்சு பொதி இயந்திரங்களில், தீப்பற்றி, மளமளவென பரவியது.

இதனால், அங்கிருந்த பணியாளர்கள், அலறியடித்து வெளியேறினர். இதில் காயமடைந்த, பெண் தொழிலாளி ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வாழப்பாடி தீயணைப்பு துறையினர், இரண்டு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில், இயந்திரங்கள், பஞ்சு பொதிகள் எரிந்து நாசமாகின.ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X