சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி நியமன ஆணை: தி.மு.க., பிரமுகர் மோசடி

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

திருச்சி : திருச்சியில், மத்திய கல்வி நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாக, போலி நியமன ஆணை வழங்கி, இளம்பெண்ணிடம், 3.50 லட்சம் மோசடி செய்த, தி.மு.க., பிரமுகரை, போலீசார் கைது செய்தனர்.திருச்சி, பொன்னகரைச்சேர்ந்தவர், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி, கணேசன், 50. இவர், கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த, நிஷானா, 25, என்பவரிடம், துவாக்குடியில் உள்ள, ஐ.ஐ.எம்., என்ற, 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்'மத்திய கல்வி நிறுவனத்தில், நுாலகர் பணி வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அதை நம்பிய நிஷானா, பல்வேறு தவணையாக, 2017ம் ஆண்டு முதல், 3.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.சில மாதங்களுக்கு முன், ஐ.ஐ.எம்., நிறுவனத்தில், வேலை கிடைத்து விட்டதாக கூறி, பணி நியமன ஆணை ஒன்றை வழங்கியுள்ளார். நிஷானா, பணியில் சேர சென்றபோது, அது, போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நிஷானா, கொடுத்த பணத்தை கணேசனிடம் கேட்க, அவர், காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால், அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லை.

இது குறித்து நிஷானா, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், தி.மு.க.,பிரமுகர், கணேசனை கைது செய்தனர். இவர், இதேபோல் பலரையும் ஏமாற்றியிருப்பது, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-ஜூன்-201908:07:07 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj இதேபோல பலரையும் ஏமாற்றி வாய்க்கால் புறம்போக்கினில் வீடுகட்டிட அனுமதி அளித்துள்ள காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் ஊராட்சி அதிகாரிக்கும் காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை அளிக்கப்படும் சாலைகள் எல்லாம் பட்டா போட்டு தந்து மாமல்லன் நகர் மின்னகர் அசோக்நகர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X