சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியில் கஞ்சா கடத்திய 'மாஜி' எஸ்.ஐ., மகன் கைது

Added : ஜூன் 11, 2019
Advertisement

நாகர்கோவில் : மார்த்தாண்டத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதான, முன்னாள், எஸ்.எஸ்.ஐ.,யின் மகன், வாலிபர், ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.குமரி மாவட்டம், மார்த்தாண்டம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சொகுசு காரில் வந்த, இரு வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள், குழித்துறை அருகே உள்ள பாளையங்கட்டியைச் சேர்ந்த சுதீஷ், 21, மற்றும் ஓய்வு பெற்ற, எஸ்.எஸ்.ஐ., ஒருவரின் மகன் ரபீஷ்மோன், 24, என்பதும், கஞ்சா உட்பட போதை பொருட்களை, பள்ளி மாணவர்களுக்கு, விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

இவர்களிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா, சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.இருவரும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி, சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி, குமரியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.இவர்களுக்கு, மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவன் உதவியாக இருந்துள்ளான். அவனையும் போலீசார் கைது செய்தனர்.மூவரையும் நேற்று, குழித்துறை கோர்ட்டில், போலீசார் ஆஜர்படுத்தினர். பின், ரபீஷ்மோன், சுதீஷ் ஆகியோர், நாகர்கோவில் சிறையிலும், பிளஸ் 2 மாணவன், நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X