பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலை நடை திறப்பு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 11, 2019
Advertisement
சபரிமலை,நடை திறப்பு

சபரிமலை : சபரிமலையில் இன்று(ஜூன் 12) நடைபெறும் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

மாலை 5:00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.தொடர்ந்து தந்திரி பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 7:30 மணிக்கு உதயாஸ்தமன பூஜை தொடங்கும். பகல் 12:30 மணிக்கு பிரதிஷ்டை தின சிறப்பு களபாபிஷேகம்உச்சபூஜை தீபாராதனை நடைபெறும். பகல் 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஆனி மாத பூஜைகளுக்காக 15-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. நேற்று தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தாலும் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X