பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வாய் கண்டிகையில் ஆய்வு

Added : ஜூன் 11, 2019
Advertisement

நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, தேர்வாய் கண்டிகை நீர்தேக்க பணிகளை, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்வாய் கண்டிகை - கண்ணன்கோட்டை ஏரிகளை இணைத்து, புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணிகள், நடந்து வருகின்றன. இங்கு தேக்கப்படும் நீரை, சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.நீர்தேக்கம் அமைக்கும் பணிகளை துவக்கி, ஆறு ஆண்டுகளை கடந்தும், பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருகின்றன.

இதனால், இந்தாண்டு கிடைக்கும் வடகிழக்கு பருவமழை நீரை, சென்னை குடிநீருக்கு அனுப்ப முடியுமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.இதுகுறித்த விரிவான செய்தி, நம் நாளிதழில், இம்மாதம், 7ம் தேதி வெளியானது. இதையடுத்து, நீர்தேக்க பணிகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை, அறிக்கையாக தருமாறு, பொதுப்பணித்துறைக்கு, அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான அறிக்கை, தேர்வாய் கண்டிகை நீர்தேக்க திட்ட, செயற்பொறியாளர் வாயிலாக, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்த அரசு, பணிகளை விரைவுப்படுத்தும்படி பொதுப்பணித்துறை செயலர், பிரபாகருக்கு உத்தரவிட்டுள்ளது.

அவரது உத்தரவை அடுத்து, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், ஜெயராமன், தேர்வாய் கண்டிகை நீர்தேக்க திட்ட செயற்பொறியாளர், பழனிசாமி உள்ளிட்டோர், நேற்று, தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்திற்கு சென்றனர். பணிகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த அதிகாரிகள், பணிகளை விரைவுப்படுத்தும்படி, ஒப்பந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X