கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விசாரணையை ஏன் சந்திக்க கூடாது?

Added : ஜூன் 11, 2019
Advertisement

சென்னை : 'ஆரம்ப முகாந்திரம் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணையை ஏன் எதிர்கொள்ளக் கூடாது' என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், ௨௦௧௧ - ௧௫ம் ஆண்டில், போக்குவரத்து துறை அமைச்சராக, செந்தில்பாலாஜி இருந்தார்.

போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக, உத்தரவாதம் அளித்ததால், செந்தில் பாலாஜியின் உறவினர் பிரபு என்பவரிடம், ௯௫ லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், பின், வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும், கணேஷ்குமார் என்பவர், புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், செந்தில் பாலாஜி, முன்ஜாமின் பெற்றார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவில், 'எனக்கும், குற்றச்சாட்டுக்கும் சம்பந்தம் இல்லை; அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது.

'ஆரம்ப முகாந்திரம் உள்ள நிலையில், வழக்கு விசாரணையை ஏன் எதிர்கொள்ளக் கூடாது' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ''நீதிமன்ற தீர்ப்புகள் சிலவற்றை மேற்கோள் காட்ட வேண்டியதுள்ளது,'' என்றார்.அதற்கு அனுமதி அளித்து, விசாரணையை, வரும், ௧௮ம் தேதிக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.

அ.தி.மு.க.,வில், எம்.எல்.ஏ.,வாக இருந்த செந்தில் பாலாஜி, தினகரன் ஆதரவாளராக மாறினார். தகுதி நீக்க நடவடிக்கையில், எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். பின், தி.மு.க.,வில் இணைந்தார். சமீபத்தில், அரவக்குறிச்சி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X