கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை கைது செய்ய தடை

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை கைது செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை, சைதாப்பேட்டை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மா.சுப்ரமணியன். இவருக்கு எதிராக, கிண்டி போலீஸ் நிலையத்தில், பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

அதில், சுப்ரமணியனும், அவரது மனைவியும், போலி ஆவணங்களின் அடிப்படையில், 'சிட்கோ' நிறுவனத்தின் நிலத்தை அபகரித்திருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து, மா.சுப்ரமணியன், அவரது மனைவிக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தில், மா.சுப்ரமணியன், அவரது மனைவி, காஞ்சனா மனு தாக்கல் செய்தனர். மனு, நீதிபதி இளந்திரையன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் வழங்க, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இவ்வழக்கில் தன் தரப்பையும் கேட்கும்படி, பார்த்திபன் தரப்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமின் மனுவின் விசாரணையை, இன்றைக்கு தள்ளி வைத்து, அதுவரை, இருவரையும் கைது செய்யக் கூடாது என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-ஜூன்-201913:09:47 IST Report Abuse
Cheran Perumal நில அபகரிப்பு வழக்குகளில் திமுக வினர் யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. நீதிமன்றங்களில் இவர்களுக்கு உள்ள செல்வாக்குதான் காரணமா?
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-ஜூன்-201908:10:13 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj இதேபோல காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகளை நடத்திவரும் முன்னாள் பெண் எம் எல் ஏ மீதும் நடவடிக்கை பாயுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X