கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குழந்தை விற்பனை வழக்கில் மூவருக்கு ஜாமின் மறுப்பு

Added : ஜூன் 11, 2019
Advertisement

சென்னை : குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட, மூன்று பேருக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாமக்கல், அரசு மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வந்த அமுதவல்லி என்பவர், போலி சான்றிதழ் தயாரித்து, பிறந்த குழந்தைகளை விற்பனை செய்வதாக, ரமேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில், அருள்சாமி உள்ளிட்ட மூவர், ௨௦௧௯ ஏப்., ௨௪ம் தேதி கைது செய்யப்பட்டனர். மூவரும் ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.'தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; குழந்தை விற்பனை குறித்து, எதுவும் தெரியாது' என, மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்களை, நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.ஜாமின் வழங்க, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, 'மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை; விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்பதால், ஜாமின் வழங்க முடியாது' என, மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X