அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையை கூட்ட மார்க்சிஸ்ட் தீர்மானம்

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : - 'வறட்சி, குடிநீர் பிரச்னை குறித்து விவாதிக்க, சட்டசபை கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.சென்னையில் நேற்று, அக்கட்சியின் மாநில குழுக் கூட்டம் நடந்தது.

தேசிய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:தமிழகத்தில், கடும் வறட்சி நிலவுகிறது; குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழலில், மக்கள் துயரம் அதிகரித்துள்ளது. இந்த பின்னணியில், புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்தும், காவிரி பிரச்னை குறித்தும், வறட்சி குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். எனவே, உடனே, அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுவதுடன், சட்டசபையையும் கூட்டவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜூன்-201908:03:22 IST Report Abuse
Bhaskaran உள்ளூர் பிரச்சனைகளும் நினைவுக்கு வருவது குறித்து மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X