பொது செய்தி

தமிழ்நாடு

'காஞ்சிபுரம் கலெக்டரிடம் கேளுங்க...!'

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

- நமது நிருபர் குழு -பொதுப்பணித்துறை ஆசியுடன், ஒப்பந்ததாரர் நடத்திய மண்வேட்டையால், மாடம்பாக்கம் ஏரியில் நீரை தேக்கி வைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை, உதவி செயற்பொறியாளர், ராதாகிருஷ்ணன் என்பவரிடம், கேட்டபோது, ''தினமலர் நாளிதழில், அற்புதமான செய்தியை வெளியிடுகிறீர்கள்; அரசு அதிகாரி என்ற முறையில், நான், தனியாக உங்கள் நாளிதழில் மீது வழக்கு தொடரலாம்,'' என, கோபத்தை கக்கினார்.''நெமிலிச்சேரி ஏரி குறித்து, செய்தி வெளியிட்ட நிருபர் யார்?'' என, அவர் கேட்க, ''அந்த நிருபர் யார் என்று தெரியாது;

நான் மாடம்பாக்கம் ஏரி குறித்து கேட்கிறேன்,'' என, நம் நிருபர் தெரிவிக்க, ''தாம்பரத்தில் இருக்கிற உனக்கு, நெமிலிச்சேரி ஏரி குறித்த, செய்தியை வெளியிட்டது யார் எனத் தெரியவில்லை என்றால், நீ, உண்மையிலேயே நிருபர் தானா என, எனக்கு சந்தேகமாக உள்ளது. மொபைல் போனில் பேசுவதை வைத்து, நீ நிருபர் என, எங்களால் உறுதிப்படுத்த முடியாது. ''தகவல் தேவை என்றால், படப்பையில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகம் அல்லது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் சென்று பெற்றுக் கொள்,'' எனக் கூறி, மொபைல் போன் இணைப்பை துண்டித்தார், ராதாகிருஷ்ணன்.

நல்ல அதிகாரிஉதவி செயற்பொறியாளர், ராதாகிருஷ்ணன் திட்ட விபரங்களை எப்போதும் விரல் நுனியில் வைத்திருப்பார். பத்திரிகையாளர்கள், ஏதேனும் விபரங்களை கேட்டால், தெளிவாக, புள்ளி விபரங்களுடன் உரிய விளக்கம் தருபவர். ஆனால், நம் நாளிதழிலில், நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, தொடர்ந்து செய்திகள் வெளிவரும் நிலையில், அரசின் மேலிடத்தில் இருந்து, அதிகாரிகளுக்கு வரும் நெருக்கடி காரணமாக, அவர், இவ்வாறு, நமது நிருபரிடம், கோபத்தை கக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

சென்னை, புறநகரில் உள்ள மாடம்பாக்கம் பேரூராட்சியில், 250 ஏக்கர் பரப்பளவில், பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த ஏரி, தொடர்ச்சி 2ம் பக்கம்காஞ்சிபுரம் கலெக்டரிடம்...முதல் பக்கத் தொடர்ச்சிமாடம்பாக்கம், பதுவஞ்சேரி மற்றும் நுாத்தஞ்சேரி ஆகிய பகுதிகளின், நிலத்தடி மற்றும் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, மற்ற ஏரிகளை போல இல்லாமல், மாடம்பாக்கம் ஏரி, முழுக்க முழுக்க, விவசாயத்திற்காக மட்டுமே, 50 ஆண்டுகளுக்கு முன் பயன்பட்டு வந்தது.

பொதுப்பணித்துறை அலட்சியம் காரணமாக, இந்த ஏரியின் கொள்ளளவு படிப்படியாக குறைந்தது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், ஏரியின் ஆக்கிரமிப்புகளை கண்டுக்கொள்ளவே இல்லை.ஏரியை துார்வார வேண்டும் என, விவசாயிகளும், பொதுமக்களும், 25 ஆண்டுகளாக பொதுப்பணித் துறையிடம் முறையிட்டு வந்தனர். மாடம்பாக்கம் ஏரி வாயிலாக, 650 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் அளிக்கப்பட்டது. போதிய தண்ணீர் இல்லாததால், தற்போது விவசாய நிலங்களில் பரப்பு, 400 ஏக்கராக சுருங்கி விட்டது.கடைசியாக, 2015ல் ஏற்பட்ட பெருமழையால் மாடம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்துள்ளது.

அதேநேரம், உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, மழைநீர் வெளியேற வழியின்றி, ஊருக்குள் புகுந்தது. தமிழக அரசு, 2017 ஏப்ரலில் இந்த ஏரியை புனரமைப்பதற்கு அரசாணையை வெளியிட்டது.நீண்ட இழுபறிக்கு பின், சமீபத்தில், ஏரிக்குள் வண்டல் மண் எடுக்கும் பணிகள் துவங்கின. இதில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகளவு மண் வெட்டி எடுக்கப்பட்டு, ஏரி முழுவதும் கபளீகரம் செய்யப்பட்டு உள்ளது. பணிகள் நடந்தபோதே, முறைகேடு நடப்பதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், பணிகளை பார்வையிட்டு முறைப்படுத்த வேண்டிய பொதுப்பணித் துறை அதிகாரிகள், கண்டுகொள்ளவில்லை.

அதேபோல், மண் எடுத்து முடித்தவுடன், ஏரியின் ஒருபுறம், சேதமடைந்த கரைகளை சீரமைத்த அதிகாரிகள், மறுபுறம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, கரைகளை மீட்கவும், அவற்றை பலப்படுத்தவும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் வாயிலாக, ஏரியில் மண் எடுத்து, பணம் பார்க்க வேண்டும் என்ற, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரரின் எண்ணம் மட்டுமே, நிறைவேறி உள்ளது.இனியாவது, இந்த ஏரியை முறையாக புனரமைத்து, நீரை தேக்கி, பாசனம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்தால் நல்லது என்கின்றனர் பொதுமக்கள்.

'தன்னார்வலர்களுக்குஅனுமதி மறுப்பு!'மாடம்பாக்கத்தை சேர்ந்த, ராதாகிருஷ்ணன், 55, கூறியதாவது:மாடம்பாக்கம் ஏரியை, 2018 ஜூன், 3ல், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை குழுவினர், சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். மாடம்பாக்கம் -- சிட்லப்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் துவங்க உள்ளது எனக்கூறி, அவர்களை பணி செய்ய விடாமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தடுத்து நிறுத்தினர்.

இதனால், ஏரியை சுத்தம் செய்யும் முயற்சி தடைப்பட்டது.அரசு உத்தரவுப்படி, துார்வாரி, வண்டல் மண் எடுப்பதாக கூறி, ஏரியை பொதுப்பணித் துறையினரும், ஒப்பந்ததாரரும் நாசம் செய்துள்ளனர். மொத்தம், 250 ஏக்கராக இருந்த ஏரியின் பரப்பளவை, பொதுப்பணித் துறை அதிகாரிகள், தங்கள் ஆவணங்களில், 80 ஏக்கராக மாற்றி உள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக, இந்த விவரங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-ஜூன்-201908:24:35 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகள் செய்வதே அரசியல்வாதிகளும் அரசு அலுவலர்களும் தான் எனவே காஞ்சிபுரம் நகருக்கு இதே வினாவை தினமலர் நிருபர் எழுப்பவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X