அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
Admk,ஒற்றை தலைமை பிரச்னை,அ.தி.மு.க.,மோதல்,வெடிக்குமா?

சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்னை சர்ச்சையை கிளப்பியுள்ள சூழலில் அக்கட்சியின் மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் அமைதியாக நடந்தது. லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டது.

அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் நிர்வாகிகள் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை. பன்னீர்செல்வம் அணி - பழனிசாமி அணி என்பது தொடர் கதையாகவே உள்ளது. தேர்தலுக்கு முன் ஆட்சியிலும் கட்சியிலும் முக்கிய முடிவுகளை முதல்வரும், அவரது ஆதரவாளர்களான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் தான் எடுத்தனர். கொங்கு மண்டலத்தில் கட்சிக்கு செல்வாக்கு இருந்ததாலும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகம் உள்ளதாலும் அவர்கள் கூறுவதை மற்ற அமைச்சர்கள் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆனால், லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. முதல்வரின் சொந்த தொகுதியான இடைப்பாடியிலேயே அ.தி.மு.க. அதிக ஓட்டுகள் பெறவில்லை. ஆனால் தேனி லோக்சபா தொகுதியில் பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற்றார். பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடியில் அ.தி.மு.க. அதிக ஓட்டுகளை பெற்றது. ஆனால் அவரது சொந்த ஊரான பெரியகுளம், அ.தி.மு.க.வின் பாரம்பரிய தொகுதியான ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல்களில்

அ.தி.மு.க. மண்ணை கவ்வியது.
இதையடுத்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்றுமற்ற அமைச்சர்களும் கட்சியினரும் வலியுறுத்த துவங்கினர். இந்தச் சூழ்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி தர பா.ஜ. தலைமை முன்வந்தது. ஆனால் ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கத்தை துாண்டி விட்டு பழனிசாமி தரப்பு அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது. இதனால் விரிசல் அதிகமானது. அதைத் தொடர்ந்து கட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் பழனிசாமி இறங்கியுள்ளார்.அதேநேரத்தில் 'கட்சியில் இரட்டை தலைமை இருப்பதால் விரைவாகவும் உறுதியாகவும் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரைதலைமைக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை. ஆளுமை திறனுடைய தலைவர் வேண்டும். ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும்' என எம்.எல்.ஏ.க்கள் சிலர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


இந்த கோரிக்கை பெரிய விவாதமாக உருவெடுக்க துவங்கியதும் இதுகுறித்து பேச மாவட்ட செயலர்கள் மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு விடப்பட்டது. அதன்படி சென்னையில் இன்று(ஜூன் 12) அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் , மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., மதுசூதனன் உட்பட5 பேர் மட்டுமே பேசியதாக தெரிகிறது.இந்த கூட்டத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளவும், அதில் மிகப்பெரிய வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில், ''ஒற்றை தலைமை விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை'' என்றார்.


தீர்மானம்


கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விபரம் :
1. தேஜ கூட்டணியில் பிரதமரை முன்மொழிய அதிமுக.,விற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி
2. லோக்சபா மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக.,விற்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி
3. தேர்தலில் அதிமுக.,வுடன் இணைந்து பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி
4. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற உறுதி ஏற்பது.
5. உள்ளாட்சி தேர்தலில் வெற்று பெறும் வகையில் அதற்கான பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டம் முடிந்த பின்னர் அதிமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் , ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பரபரப்பு


இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகம் அருகே, '' பொதுச்செயலாளராக பதவியேற்க வரும் எடப்பாடியாரே'' எனக்குறிப்பிடப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கையில், செங்கோட்டையனை பொது செயலாளராக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
12-ஜூன்-201920:18:39 IST Report Abuse

Sivagiriஅடடா . . இவர்கள் குழப்பம் தீர்ந்தது . . ஆனா டில்லி காங்கிரஸ் ஹெட்ஆபீஸில் தீராத குழப்பம் . . .

Rate this:
Jagadeesan Vaidyanathan - chennai,இந்தியா
12-ஜூன்-201919:22:20 IST Report Abuse

Jagadeesan Vaidyanathanநடக்காது, தொடராது, கவிழ்ந்துவிடும் : ஏன் இந்த வார்த்தைகள்.தண்ணீர் பிரச்சனை என்பது மழை இன்மையே காரணம். மீண்டும் ஒரு தேர்தலா? அப்படி நடந்தால் மீண்டும் சுடலையின் ஆட்சி வரும் என்ற எண்ணம்மா. ஹிந்துக்களையும்,கோவில்களையும்,தவறாக பேசிவிட்டு மற்ற மதத்தினரை மதித்த சுடலை ஆட்சி வேண்டுமா. இந்த ஆட்சிக்கு என்ன குறை. உட்கட்சி பூசல் பற்றி நமக்கு கவலை வேண்டாம். ஜே ஜே வால் தேர்வு செய்யப்பட்ட கருணாஸ் மற்றும் அன்சாரி மனசாட்சி இன்றி அ.தி.மு க விற்கு எதிராக செயல்பட்டால் அவர்ஹல் எதிர்காலம் மண்ணோடு மண்ணாக போய்விடும்.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜூன்-201919:11:38 IST Report Abuse

Natarajan Ramanathanரஜினியை தலைவர் ஆக்குங்கள் என்று நான் நக்கல் செய்வதுகூட எதிர்க்குரலுக்கு விளங்கவில்லை....பாவம்.

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
20-ஜூன்-201909:04:17 IST Report Abuse

எதிர்க்குரல் மக்கள் விக்கலில் இருக்கும் போது தேவையா இந்த நக்கல்?? அதான் இந்த உதைகள். ...

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X