சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கிரேசி' மோகன் உடல் தகனம்

Added : ஜூன் 11, 2019
Advertisement

சென்னை : மறைந்த, 'கிரேசி' மோகனின் உடல், சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில், நேற்று தகனம் செய்யப்பட்டது. பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், வசனகர்த்தாவுமான, 'கிரேசி' மோகன், 66, மாரடைப்பால், நேற்று முன்தினம் காலமானார்.அவரது உடல், சென்னை, மந்தைவெளியில் உள்ள வீட்டில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என, ஏராளமானோர், கிரேசி மோகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை, 11:00 மணியளவில், மந்தைவெளியில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட, அவரது உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், நடிகர்கள் கமல், சிவகுமார், நாசர், காத்தாடி ராமமூர்த்தி, விவேக், கவுண்டமணி மற்றும் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X