பதிவு செய்த நாள் :
ராகுல் தொடர் மவுனம்
காங்.,கிற்கு புது தலைவர்

புதுடில்லி: காங்., தலைவர் பொறுப்பை தொடர்வது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல், ராகுல் மவுனமாக இருப்பதால், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த விவாதம் துவங்கியுள்ளது.

ராகுல், தொடர் மவுனம், காங்., புது தலைவர்,லோக்சபா


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், 52 தொகுதிகளில் மட்டுமே, காங்., வென்றது. உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், அக்கட்சித் தலைவர், ராகுல் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில், கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் வென்றார். 'லோக்சபா தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்; எங்கள் குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக

தேர்ந்தெடுங்கள்' என, காங்., காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் கூறினார்.

'தலைவர் பதவியில் ராகுல் தொடர வேண்டும்' என, காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், பதவி விலகும் முடிவில், ராகுல் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சியின் தலைவராக, ராகுல் தொடர்கிறாரா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என, அவரை வலியுறுத்த, மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், ராகுல் யாரையும் சந்திக்கவில்லை. இந்நிலையில், ராகுலுக்கு மாற்றாக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும், மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும் பேச்சு எழுந்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: தலைவராக ராகுல் தொடர வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்தால், மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆராயப்படும்.

Advertisement

கட்சியை நிர்வகிக்க, செயல் தலைவராக, மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படலாம். அவருக்கு, மூத்த தலைவர்கள் அடங்கிய குழு பக்கபலமாக இருந்து, முடிவுகள் எடுக்கப்படும்.

கட்சியின் லோக்சபா தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே, இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார். அதனால், அந்தப் பொறுப்பை ஏற்கும்படியும், ராகுலை வலியுறுத்தி வருகிறோம்.அடுத்த சில நாட்களில், இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். பார்லிமென்ட் கூட்டம், 17ல் துவங்க உள்ளதால், அதற்கு முன், கட்சியின் புதிய தலைவர் யார், லோக்சபா தலைவர் யார் என்பது முடிவு செய்யப்படும்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
12-ஜூன்-201920:34:44 IST Report Abuse

SivagiriWanted :- காங்கிரஸ் கம்பெனி ஹெட் ஆபீஸ் மேனேஜர் தேவை - தகுதி :- பேசினால் யாருக்கும் கேட்க கடாது . . கண்ணைத் திறந்து கொண்டே தூங்க வேண்டும். - பிஎம் ஆக ப்ரமோஷன் கிடைக்கலாம் . .

Rate this:
விவசாயி - Tiruppur,இந்தியா
12-ஜூன்-201915:25:40 IST Report Abuse

விவசாயி வழுவான தலைவர் என்றால் யார்?. கோமாளி தலைவர் என்றாலும்,ஊழல் தலைவர் குடும்பம் என்றாலும், நில மோசடி தலைவர் என்றாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு வாய்ப்பு உண்டு......

Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
12-ஜூன்-201914:18:41 IST Report Abuse

Sridhar Rengarajanஇஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று மைனாரிட்டி வாக்குகள் எப்போதும் காங்கிரசுக்குத்தான் அளிக்கப்படுகிறது. கிறிஸ்தவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். அதனால் இப்போது இஸ்லாமியர் ஒருவரை அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும். ஏன் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்த குலாம் நபி ஆசாத்துக்கு என்ன குறைச்சல். தகுதி இல்லையா, திறமை இல்லையா, படிப்பு இல்லையா. குலாம் நபி அசாத்தை தலைவராக்கினால் என்ன.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X