கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்னை: ஐகோர்ட் கேள்வி

Added : ஜூன் 11, 2019
Advertisement

சென்னை : 'மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க, விடுமுறை கேட்ட வழக்கில் வாதாட, நளினியை ஆஜர்படுத்துவதில், என்ன பாதுகாப்பு பிரச்னை உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலுார் மகளிர் சிறையில் உள்ளார். இவரது கணவர் முருகனும், வேலுார் சிறையில் உள்ளார். இவர்களின் ஒரே மகளான மெகரா, லண்டனில் வசித்து வருகிறார். மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க, ஆறு மாத விடுமுறை அளிக்க, நளினி மனு அளித்துள்ளார்.

வேலுார், டி.ஐ.ஜி.,க்கு அளிக்கப்பட்ட மனு, அரசுக்கு அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனுவில், 'சிறையில், ௨௭ ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். 'இதுவரை, சாதாரண விடுமுறை கூட எடுத்தது இல்லை. என் தாயாரும், மனு அனுப்பி உள்ளார். மனுக்களை பரிசீலிக்க வேண்டும்' எனக், கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வாதாட, நீதிமன்றத்தில் தன்னை ஆஜர்படுத்த, அரசுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடக்கோரி, மற்றொரு மனுவை, நளினி தாக்கல் செய்தார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அடங்கிய, பெஞ்ச் முன், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.'இவ்வழக்கில் வாதாட, நளினியை ஆஜர்படுத்துவதில், என்ன பிரச்னை உள்ளது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசு வழக்கறிஞர், 'நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில், பாதுகாப்பு பிரச்னை உள்ளது' என்றார்.அதற்கு, நீதிபதிகள், 'தன் வழக்கில் நளினி ஆஜராகும் உரிமையை மறுக்க முடியாது. அவர், நீதிமன்றத்தில் ஆஜராவதால், என்ன பாதுகாப்பு பிரச்னை உள்ளது; இதுகுறித்து, விரிவான மனுவை, அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், ௧௮ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X