முக்கியத்துவம் | Dinamalar

முக்கியத்துவம்

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (1)
 முக்கியத்துவம்

விவசாயம், வேலை வாய்ப்பு அதிகரிப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு தான், மத்திய பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக, விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான், அரசின் முதல் பணி. மீன்வளத்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிர்மலா சீதாராமன் , மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,
எச்சரிக்கை
கதுவா பாலியல் பலாத்கார சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை வரவேற்கத்தக்கது. இது போன்ற கொடூரத்தில் ஈடுபடும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாக, இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. பலாத்கார குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
உதவித்தொகை
சிறுபான்மையின மாணவர்கள், ஐந்து கோடி பேருக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதில், 50 சதவீதம், மாணவியருக்கு ஒதுக்கப்படும். பள்ளி மற்றும் கல்லுாரிகளில் சிறப்பாக படிக்கும், சிறுபான்மையின மாணவ - மாணவியர் அனைவரும், இந்த உதவித்தொகையை பெற முடியும்.
முக்தார் அப்பாஸ் நக்வி , மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X