கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஸ்டெர்லைட்' வழக்கில்
நீதிபதி விலகல்

சென்னை: 'ஸ்டெர்லைட்' ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்ததால் வேறு நீதிபதிகளின் விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட்,வழக்கு,நீதிபதி,விலகல்


துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். கலெக்டரிடம் மனு அளிக்க அவர்கள் திரண்டு வந்தபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசும் உத்தரவிட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஆலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம்

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஆலை மூடியிருப்பதால் 1,380 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து ஆலையை திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்கக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் கே.கே.சசிதரன் , பி.டி.ஆஷா முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சசிதரன் ''ஸ்டெர்லைட் தொடர்பான

Advertisement

ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரித்து உத்தரவு பிறப்பித்திருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது '' என்றார்.

வழக்கை வேறு நீதிபதிகளின் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கும் டிவிஷன் பெஞ்ச் பரிந்துரைத்தது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி, சுப்பராயன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இதே டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
12-ஜூன்-201918:20:36 IST Report Abuse

tamilanஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் திமுக, வை.கோ,காங்கிரஸ், அஇஅதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பெற்ற அந்த 1324 ,கோடி பணம் மற்றும் சாதிகட்சி திருமாவளவன் பெற்ற10 கோடிகள் திரும்ப ஆலை நிர்வாகத்திற்கு கிடைக்குமா????

Rate this:
sridhar - Chennai,இந்தியா
12-ஜூன்-201912:31:29 IST Report Abuse

sridharபாதிரிகள் பேயாட்டத்தால் தூத்துக்குடி பொருளாதாரம் தள்ளாட்டம்.

Rate this:
Girija - Chennai,இந்தியா
12-ஜூன்-201910:52:35 IST Report Abuse

Girijaசட்டம் ஒரு இருட்டறை "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்". இது நீதி மன்றங்களுக்கு தெரியாதா? பொய் பிரச்சாரத்தால் எத்தனை பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது ? அங்கு எதனை பேருக்கு கேன்சர் ? எத்தனைபேருக்கு சுவாச கோளாறு ? இன்று வரை உண்மையான தகவல் இல்லை. தமிழ் நாடு பொல்லுஷன் கண்ட்ரோல் போர்டு என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு பணம் கொட்டும் போர்டு என்று வைக்கலாம் அத்தனை தில்லுமுல்லு

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X