வதந்தி பரப்பிய தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 வதந்தி பரப்பிய தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை

ஆமதாபாத் : விமானம் கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பிய, மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு, ஆமதாபாத், சிறப்பு நீதிமன்றம், ஆயுள் தண்டனையும், 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர், பிர்ஜு ஷல்லா, 38. இவன், 2017ல், டில்லியிலிருந்து, மும்பைக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்றான். அப்போது, அந்த விமானத்தின் கழிப்பறையில் இருந்த குப்பை கூடையில், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில், 'பிரின்ட்' செய்யப்பட்ட ஒரு காகிதம் இருந்தது.அதில், 'இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது.
இதில், 12 கடத்தல்காரர்கள் உள்ளனர். விமானத்தை, நேரடியாக, பாகிஸ்தானுக்கு செலுத்த வேண்டும். 'வேறு எங்காவது தரை இறக்கினால், விமானத்தில் இருப்பவர்களின் மரண ஓலம் கேட்கும். இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என, எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த விமானம், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் தரையிறக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இதில், விமான கடத்தப்பட்டதாக கூறப்பட்டது, வெறும் வதந்தி என தெரிய வந்தது. விசாரணைஇது குறித்து, விசாரணை நடத்திய, தேசிய புலனாய்வு அமைப்பினர், அந்த விமானத்தில் பயணித்த, பிர்ஜு ஷல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

அவன், முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததை அடுத்து, விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது. அவனது அலுவலக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்தபோது, விமான கடத்தல் வதந்தி குறித்த கடிதத்தை, அலுவலக, 'லேப்டாப்'பில், அவன், 'டைப்' செய்ததும், அங்கேயே, 'பிரின்ட்' எடுத்ததும் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, பிர்ஜு ஷல்லா, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், டில்லி அலுவலகத்தில் பணியாற்றும் தன் காதலியை, மும்பைக்கு வரவழைப்பதற்காக, கடத்தல் நாடகமாடியதாக, தெரிவித்தான்.விமான கடத்தப்படுவதாக, அடிக்கடி வதந்தியை பரப்பி, டில்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்தை மூட வைத்து, அங்கு பணியாற்றும் தன் காதலியை, மும்பைக்கு வரவழைப்பதே, ஷல்லாவின் நோக்கம்.தீர்ப்புஇது தொடர்பான வழக்கு, ஆமதாபாத், தேசிய புலனாய்வு அமைப்பு, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி, எம்.கே.தவே அளித்த தீர்ப்பு:விமானம் கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பி, நாடகமாடிய, பிர்ஜு ஷல்லாவுக்கு, ஆயுள் தண்டனையும், 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.இந்த அபராதத்திலிருந்து, தலா, 1 லட்சம் ரூபாயை, பைலட் மற்றும் உதவி பைலட்டிற்கு செலுத்த வேண்டும். தலா, 50 ஆயிரம் ரூபாயை, விமான பணிப் பெண்கள், மூன்று பேருக்கு செலுத்த வேண்டும். விமானத்தில் வந்த பயணியருக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப் போவதாக, பிர்ஜு ஷல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான கடத்தல் வதந்தி பரப்புவதை, தீவிர குற்றமாக கருதும் வகையில், 2016ல், சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, விமான கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்புவோருக்கு, ஆயுள் அல்லது துாக்கு தண்டனை அளிக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ், முதல் முதலாக, தற்போது, பிர்ஜு ஷல்லாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sriwilli - jakarta,இந்தோனேசியா
13-ஜூன்-201912:01:27 IST Report Abuse
sriwilli நம்ம ஊர் மாமனுங்களுக்கு ஒரு தண்டனையும் இல்லேயே??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X