பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'பணம் தரும் இடமில்லை சபரிமலை'
வழக்கறிஞர் ஆணையம் காட்டம்

சபரிமலை: 'சபரிமலை, பக்தர்களுக்கான கோவில்; அதை வருமானம் தரும் இடமாக அரசு அமைப்புகள் கருதக்கூடாது' என, கேரள உயர் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

சபரிமலை,கோவில்,வழக்கறிஞர் ஆணையம்,காட்டம்


கடந்த ஆண்டு, கேரளாவில் பெய்த பெருமழையால், பம்பை உருக்குலைந்தது. இதை தொடர்ந்து, நிலக்கல் வரை மட்டுமே தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சபரிமலை, 'சீசன்' காலத்தில், நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு, அதிக பஸ்கள் இயக்கப்படும். ஆனால், மாத பூஜை காலங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை.கடந்த ஆண்டு, சபரி மலையில், மண்டல, மகரவிளக்கு காலத்தில், பெண்களை கோவிலுக்குள்

அனுமதித்த பிரச்னையால், பக்தர்கள் கூட்டம் பெருமளவு குறைந்தது. மாத பூஜை காலத்தில், பம்பை வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாததாலும், பக்தர்கள் வருகை குறைந்தது.

இதனால், தேவசம்போர்டுக்கு, 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாத பூஜை, ஓணம், விஷூ போன்ற நாட்களில், தனியார் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்க வேண்டும் என கோரி, தேவசம்போர்டு, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், இது குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, வழக்கறிஞர் ஆணையராக, ஏ.எஸ்.பி.குறுப்பு என்பவரை நியமித்தனர். இவர் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: சபரிமலை, பக்தர்களுக்கான கோவில். கேரள போலீஸ், அரசு போக்குவரத்துக்கழகம், தேவசம்போர்டு உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு வருமானம் பெற்றுத் தரும் இடம் அல்ல.

Advertisement

பக்தர்களை சிரமப்படுத்துவதால் தான், வருமானம் குறைந்துள்ளது. மாத பூஜைக்கான நடை திறக்கும் நாளில், பகல், 12:00 மணிக்கு தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களை வெயிலில் நடக்க வைப்பது கொடுமையானது. எனவே, அதை காலை, 6:00 மணியாக மாற்ற வேண்டும்.

மாத பூஜை, சிறப்பு பூஜை நாட்களில், வாகனங்களை பம்பை வரை இயக்க, அனுமதிக்க வேண்டும். பம்பை ஹில்டாப், திருவேணி, சக்குபாலம் ஆகிய இடங்களில், வாகனங்களை, 'பார்க்கிங்' செய்யலாம். அந்த இடங்களை, தேவசம்போர்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
12-ஜூன்-201917:05:55 IST Report Abuse

தமிழ் மைந்தன்இனி தமிழ்நாட்டில் இந்த கம்யூனிஸ்ட் கைகூலிகள் போராட்டம் நடத்துமா?....ஊழல்திமுக உதவி செய்யுமா?....திமுகவின் கூட்டணியில் உள்ள சாதி , மதவாத சக்திகள் போராட்டத்தில் கலந்து கொள்ளுமா???

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூன்-201916:21:43 IST Report Abuse

Endrum Indianஅப்போ திருப்பதிக்கும் அது பொருந்துமா???இப்போ தான் ஒரு கிறித்துவ முதலமைச்சர் ஒரு கிறித்துவ மாமாவை திருப்பதி ஆலய கமிட்டி தலைவராக நியமித்துள்ளார்???ஏன் பணம் அங்கிருந்து Channelize ஆகி அவர் அரசுக்கு வரும் என்று அவன் அப்பன் செஞ்ச அதே வழியில் செய்கின்றான்???ஏன்??கோவில் என்றால் இந்துக்கள் பணம் கொடுக்கும் இடம்?சர்ச்/ மசூதி என்றால் அது வெளிநாட்டுபணம் அங்கு வரும் இடம்???ஆகமொத்தம் இந்துக்கள் பணம் அதில் கொள்ளையடிக்கவேண்டும் என்று கம்ம்யூனிஸ்டுகள் முதல் கிறித்துவர்கள் வரை ஒரே வாய்ஜாலம் தான்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
12-ஜூன்-201909:16:36 IST Report Abuse

oceசரியான சாட்டையடி கொடுத்துள்ளார்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X