மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு | Dinamalar

மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

Added : ஜூன் 11, 2019

புதுடில்லி : அசாமிலிருந்து, 13 பேருடன் மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் பாகங்கள், அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள, மேற்கு சியாங் மாவட்டத்துக்கு, இந்திய விமானப் படையின், 'ஏ.என்., 32' ரக விமானம், கடந்த, 3ம் தேதி மதியம் புறப்பட்டது. இந்த விமானம், இந்திய விமானப் படையில், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. தொடர்பு துண்டிப்புவிமானத்தில், 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது.

அதற்கு பின், தொடர்பு துண்டிக்கப்பட்டது.இது குறித்த தகவல், விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 'சுகோய் 30' ரக போர் விமானம் உள்ளிட்ட, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.ராணுவம், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் உதவியுடனும் தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில், எட்டு நாட்களுக்கு பின், மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள், அருணாச்சல பிரதேச மாநிலம், லிபோ என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியானது. அச்சம்இந்த தகவலை, இந்திய விமானப்படை உறுதிப்படுத்தி உள்ளது.

'அருணாச்சல பிரதேசத்தின் லிபோவின் வடக்கே, 16 கி.மீ., துாரத்தில், 12 ஆயிரம் அடி உயரத்தில், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 'தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த ஹெலிகாப்டர் மூலம், மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன' என, விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும், மாயமான விமானத்தில் பயணித்த, 13 பேரின் கதி தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X