பத்திரிகையாளரை விடுதலை செய்ய உ.பி., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : ஜூன் 11, 2019
Advertisement
 பத்திரிகையாளரை விடுதலை செய்ய உ.பி., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் குறித்து, சமூக வலைதளத்தில் ஆட்சேபகரமான செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை, உடனடியாக விடுதலை செய்யும்படி, மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. டில்லியைச் சேர்ந்த, பத்திரிகையாளர், பிரஷாந்த் கனோஜியா, சமீபத்தில், சமூக வலைதளங்களில் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வழக்குப் பதிவுஅந்த வீடியோவில், ஒரு பெண், சில பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், அந்தப் பெண் கேட்பது போல, அந்த வீடியோ அமைந்துள்ளது.அதையடுத்து, முதல்வருக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டதாக, கனோஜியா மீது, லக்னோ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், டில்லியில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த கைது சம்பவத்துக்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'எடிட்டர்ஸ் கில்ட்' எனப்படும், பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், கனோஜியாவின் மனைவி, ஜகிஷா அரோரா, உச்ச நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். உத்தரவுஅந்த வழக்கை, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அடங்கிய, உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை.

அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. அதனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர், பிரஷாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இந்த உத்தரவால், அந்த பத்திரிகையாளரின் செயலை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்று அர்த்தமல்ல. தற்போது சமூக வலை தளங்களில், பல பொய் செய்திகள், மற்றவர்களை இழிவுபடுத்தும், கிண்டல் செய்யும் செய்திகள், படங்கள் அதிகம் வெளியாகின்றன. அவதுாறுஆனால், எந்த செய்தி உண்மையானது, எது பொய்யானது, எந்த நோக்கத்துடன் அது வெளியிடப்படுகிறது என்பதை, மக்கள் புரிந்து கொண்டுஉள்ளனர்.மாநில முதல்வருக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில், சமூக வலை தளத்தில், கனோஜியா வெளியிட்ட வீடியோ மீது, லக்னோ போலீசார் தங்களுடைய விசாரணையை தொடரலாம். இந்த உத்தரவு, அந்த புகார் மீதான விசாரணைக்கு தடையாக இருக்காது.

அதே நேரத்தில், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள, சுதந்திரம் என்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதனால், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது.முட்டாள்தனம்!தங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், பொய் செய்தி வெளியிட்டதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைக்க, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., முயன்றால், நாட்டில் உள்ள பெரும்பாலான பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணியாற்ற ஆள் இருக்க மாட்டார்கள். உத்தர பிரதேச முதல்வர் இந்த விஷயத்தில், முட்டாள்தனமாக நடந்துள்ளார்.ராகுல், தலைவர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X