விமான ஊழல்: பிரபுலிடம் விசாரணை

Added : ஜூன் 11, 2019
Advertisement
 விமான ஊழல்: பிரபுலிடம் விசாரணை

புதுடில்லி : விமானங்கள் வாங்கியதில் நடந்த, சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத, காங்., மூத்த தலைவருமான, பிரபுல் படேல், அமலாக்க துறை அலுவலகத்தில், இரண்டாவது நாளாக, நேற்றும் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், 2004 - 11ல், தேசியவாத, காங்., கட்சியை சேர்ந்த, பிரபுல் படேல், உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, தனியார் விமான நிறுவனங்களுக்கு, போக்குவரத்து சேவைக்கு நேரம் ஒதுக்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, புகார் எழுந்தது.

மேலும், ஏர் - இந்தியாவுக்கு, 111 விமானங்கள் வாங்கியதில், சட்டவிரோத பணப் பரிமாற்ற மோசடி நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த, அமலாக்க துறை, முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலிடம் விசாரணை நடத்த, 'சம்மன்' அனுப்பியது. இதையடுத்து, டில்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில், நேற்று முன்தினம் ஆஜரான, பிரபுல் படேலிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்றும் அவரிடம், பல மணி நேரம், கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்ந்தது. அவர் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், இந்த வழக்கு தொடர்பாக, பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக, அமலாக்க துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X