பதிவு செய்த நாள் :
மோடி விமானத்துக்கு
பாக்., அரசு அனுமதி

லாகூர்: மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நடக்கும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தனது வான் எல்லை வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

மோடி ,விமானம், பாக்., அரசு ,அனுமதி


இந்தாண்டு துவக்கத்தில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். எனப்படும்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை நமது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. அதைத் தொடர்ந்து தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு பாக். தடை விதித்தது.

இந்நிலையில் மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் 13 - 14ல் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவருடைய விமானம் பாகிஸ்தானின் வான் எல்லை வழியாக செல்ல மத்திய அரசு அனுமதி கோரியிருந்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை பாக். அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் விமானம்

Advertisement

தங்களுடைய வான் எல்லை வழியாக செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கிறார். ஆனால் மாநாட்டின் இடையே இம்ரான் கானை பிரதமர் மோடி சந்திக்க மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (8+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூன்-201907:07:55 IST Report Abuse

RajanRajanஇவனுங்க அனுமதி கொடுத்தாலும் இந்த பாக் வான் வெளி பயணத்தை மோடி தவிர்ப்பது நலம். இந்த பாக்கிகளை ஒருக்காலும் நம்ப முடியாது. அப்படி போவதென்றால் நம் விமானப்படை விமானங்களின் முழு பாதுகாப்புடன் பயணிப்பது உசிதம். WE SHOULD NEVER TAKE A CHANCE WITH THIS PAKISTAANI GOOSES.

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜூன்-201904:44:57 IST Report Abuse

J.V. Iyerமோடி விமானத்துக்கு பாக்., அரசு அனுமதி கொடுக்கலாம். ஆனால் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்காக மோடிஜி வந்தால்,வெட்டிப்பேச்சு வைக்கோ கருப்பு கோடி காட்ட டுமீல் போராளிகளுடன் தயாராக இருக்கிறார். தமிழ் துரோகி.

Rate this:
blocked user - blocked,மயோட்
12-ஜூன்-201904:38:34 IST Report Abuse

blocked userஎதற்கும் மூன்று இராணுவ ஜெட்க்களை பாதுகாப்புக்கு அனுப்புவது நல்லது.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X