சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு அனுப்புவதாகரூ.31.62 லட்சம் மோசடி

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 11, 2019
Advertisement



சிவகங்கை: காரைக்குடியில் இருந்து 17 பேரை கத்தார் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.31 லட்சத்து 62 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து, தப்பியவரை தேடி வருகின்றனர்.காரைக்குடி அமேசான் கன்சல்டன்சி நிறுவன உரிமையாளர் வைரவபாலன் 39. இந்த நிறுவனம் மூலம் முறையாக அனுமதி பெற்று வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வருகிறார்.

இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் சனவெளியைசேர்ந்த பயஸ்ரூபன் 29, தஞ்சாவூரை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகியோர் கத்தார் நாட்டிற்கு ஆட்களை அனுப்பலாம் என தெரிவித்துள்ளனர். கத்தார் செல்வதற்கான விசாவை உங்களுக்கு அனுப்புகிறோம். நீங்கள் ஆட்களை தேர்வு செய்து தாருங்கள் என வைரவபாலனிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் 17 நபர்களை கத்தார் நாட்டிற்கு அனுப்ப தேர்வு செய்து, 2018 மார்ச் முதல் 2019 ஜனவரி வரை பயஸ்ரூபன், சந்தோஷ்குமார் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு 31 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

இருவரும் சொன்னபடி 17 பேரை கத்தார் நாட்டிற்கு அனுப்ப விசா அனுப்பாமலும், பணத்தையும் திரும்ப தராமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து சிவகங்கை எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் வைரவபாலன் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவுபடி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, எஸ்.ஐ., ஜோதிமுருகன் ஆகியோர் வழக்கு பதிந்து, பயஸ் ரூபனை கைது செய்து, தப்பிய சந்தோஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X