கோவில் பூசாரிக்கு ஜாமின் பெற ஐகோர்ட் விதித்த நிபந்தனைகள் தளர்வு

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : நெரிசலில் சிக்கி, ஏழு பேர் இறந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரிக்கு, ஜாமின் பெற, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை, உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையம் கிராமத்தில், வண்டித்துரை கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை, மண்ணச்சநல்லூரை சேர்ந்த தனபால், 55, நடத்தி வந்தார்.இந்த கோவிலில், கடந்த ஏப்ரல், 21ல், சித்ரா பவுர்ணமி நாளையொட்டி, பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ஏழு பேர் இறந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக, பூசாரி தனபாலை போலீசார் கைது செய்தனர். ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இறந்த ஏழு பேரின் குடும்பத்தை சேர்ந்த, தலா ஒருவர் பெயரில், 10 லட்ச ரூபாய்க்கு, வங்கி வரைவோலை எடுத்து, அவற்றை தாக்கல் செய்து, ஜாமின் பெற்று கொள்ளலாம்' என, தெரிவித்தது.இந்த உத்தரவை எதிர்த்து, தனபால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:கோவில் விழாவில் ஏற்பட்ட சம்பவத்துக்கு, பூசாரி தனபால் மட்டுமே காரணம் என, கூற முடியாது.

மேலும், 'தையல் தொழில் செய்து தான், தனபால் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவரால், 70 லட்ச ரூபாயை எப்படி கட்ட முடியும்' என, தனபாலின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.பணம் இல்லாதவரிடம், பணத்தை செலுத்து என, எப்படி கட்டாயப்படுத்த முடியும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, மத்திய அரசும், தமிழக அரசும் நிதியுதவி செய்துள்ளன.அதனால், '70 லட்ச ரூபாய் செலுத்தி,ஜாமின் பெற்று கொள்ளலாம்' என, தனபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தளர்த்தப்படுகிறது. மனுதாரர், உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுகி, ஜாமின் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
12-ஜூன்-201907:52:42 IST Report Abuse
Darmavan பூஜாரி இவர்களை சாகடிதானா.ஏன் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை ஏன் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவில்லை என்பதற்கு பதிலில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X