நேபாளத்தில் விபத்து: இந்தியர்கள் 2 பேர் பலி

Added : ஜூன் 11, 2019
Advertisement

காத்மாண்டு : நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இந்தியர்களின் பஸ் மீது, லாரி மோதியது; இதில் இரண்டு பேர், பரிதாபமாக பலியாகினர்.ஆசிய நாடானநேபாளத்துக்கு, ஒடிசா மாநிலத்திலிருந்து, 60 பேர், ஆன்மிக சுற்றுலாசென்றிருந்தனர்.இவர்கள், காத்மாண்டுவிலிருந்து, பஸ் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு, ரவுத்காட் மாவட்டத்துக்கு சென்றனர்.பயணியர், இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக, பஸ், சந்திராபூர் வனப் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி, பஸ் மீது, மோதியது. இதில், பஸ்சில் இருந்த இரண்டு பேர், பலியாகினர்.

லாரி மோதியதில், பஸ், சாலையிலிருந்து, 20 மீட்டர் துாரத்துக்கு, வனப் பகுதிக்குள் தள்ளப்பட்டது. தகவல் அறிந்த, இந்திய துாதரக அதிகாரிகள், நேபாள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X