பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'சசிகலாவை முன்கூட்டியே
விடுவிக்க முடியாது'

பெங்களூரு : ''சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, நன்னடத்தையின் படி, முன்கூட்டியே விடுதலை செய்யும்கேள்வியே எழாது,'' என, மூத்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சசிகலா,விடுதலை,ஐ.பி.எஸ்.,ரூபா


வதந்தி:


சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறை தண்டனையும், தலா, 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, 2017, பிப்ரவரி 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மூவரும்,2017, பிப்ரவரி 15ல், பெங்களூரு பரப்பனஅக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், 2018, ஆகஸ்டில், சிறையில் சொகுசு வசதிகள் பெற, அதிகாரிகளுக்கு, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, அப்போது சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார். 'சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கொடுத்தது உண்மை தான்' என, கர்நாடக அரசு அமைத்த உயர்மட்ட விசாரணை கமிட்டியும், தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே, யார் யார் லஞ்சம் கொடுத்தனர்; யார் பெற்றனர் என்பது பற்றி, ஏ.சி.பி., எனப்படும் கர்நாடக ஊழல் ஒழிப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

கேள்வியே எழாது:


இந்நிலையில், 2019, பிப்ரவரி 14ம் தேதியுடன், சசிகலா சிறை தண்டனை அனுபவித்து, இரண்டாண்டுகள் முடிந்தன. இதற்கிடையில், 'நன்னடத்தை அடிப்படையில், ஓராண்டு முன் கூட்டியே, அவர் விடுவிக்கப்படலாம்' என, கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.

இது குறித்து, கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறை விதிகளின்படி, ஒரு பெண் குற்றவாளி, குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆண் குற்றவாளி,

Advertisement

குறைந்த பட்சம், 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்திருந்தால், அத்தகையவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க, கவர்னரிடம் பரிந்துரைப்பதற்கு, மாநில அரசுக்கு அதிகாரமுண்டு' என்றனர்.

இது பற்றி, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, தினமலருக்கு அளித்த பேட்டி: குற்றவாளிகளை, நன்னடத்தையின்படி, அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே, விடுதலை செய்ய விதிமுறை உள்ளது. ஆனால், சசிகலா வழக்கை பொருத்த வரை, அந்த விதிமுறைக்குள் வராது. எனவே, தண்டனை காலத்துக்கு முன்னதாகவே, அவரை விடுவிக்கும் கேள்வியே எழாது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
12-ஜூன்-201919:27:53 IST Report Abuse

natarajan sபொது வாழ்க்கையில் நன்னடத்தை இல்லை காரணத்தில் சிறைக்கு அனுப்பப்பட்டவருக்கு சிறையில் நன்னடத்தை காரணமாக remission . கேட்கவே புல்லரிக்கிறது. எதோ பஞ்சத்திற்கு திருடியவன் திருந்தலாம், இந்த ஜென்மங்கள் திருடுவதற்கே பிறந்தவர்கள் அவர்களுக்கு remorse என்பதே கிடையாது . வெளியில் விட்டால் தமிழகத்தை ( ஜெயா போல்) பழிவாங்க ஆக்ரோஷத்துடன் கொள்ளை அடிப்பார், அவரது அடிமைகள் காத்து கொண்டு இருக்கிறார்கள் கூட்டு கொள்ளைக்கு Ext பண்ணினால் நாட்டிற்கு நல்லது.

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
12-ஜூன்-201917:10:45 IST Report Abuse

தமிழ் மைந்தன்சசிகலா வெளியில்வந்து அஇஅதிமுக உடைந்து பின்னர் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ஊழல்தலைவரின் மகன் கனவு கானல் நீரே.......ஒரு எம்.எல்.ஏவைக்கூட கூப்பிட துப்பில்ல..........கருமம்......

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூன்-201916:06:26 IST Report Abuse

Endrum Indianதான் தகுந்த ஆவணங்கள் கொடுத்தால் தான் அது அந்த முறைப்படி நடக்கும்????ஆவணங்கள் என்பதை பணம் என்றும் படிக்கலாம் .

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X