மேத்தா மீது மேலும் 2 வழக்குகள்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: வங்கிகளில், 7,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி, ஜதின் மேத்தா மீது, சி.பி.ஐ., மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.






குஜராத்தைச் சேர்ந்தவர் ஜதின் மேத்தா. வைர வியாபாரியான இவர், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து, 'வின்சம் டைமண்ட்ஸ் அண்ட் ஜுவல்லரி' என்ற, நிறுவனத்தை நடத்தி வந்தார். நிறுவனத்தை மேம்படுத்த, பல்வேறு வங்கிகளில், 7,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினார். ஆனால், அதை திருப்பி செலுத்தாமல், கடந்த, 2016ல், மேற்கிந்திய தீவுகளுக்கு தப்பியோடி விட்டார். இதன்பின், வங்கிகள் அளித்த புகாரின்படி, சி.பி.ஐ., இது பற்றி விசாரித்து வருகிறது. அவர் மீது, இதுவரையிலும், ஏழு வழக்குகளை, பதிவு செய்துள்ளது.





இந்நிலையில், ஜதீன் மேத்தா மீது, மேலும், இரண்டு மோசடி வழக்குகளை, சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது. 'பாங்க் ஆப் மஹாராஷ்டிரா' வங்கி, தங்களிடம், 322.40 கோடி ரூபாயும், 'யூனியன் பாங்க் ஆப் இந்தியா' வங்கி, தங்களிடம், 264.15 கோடி ரூபாயும் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக, ஜதின் மேத்தா மீது, சி.பி.ஐ.,யிடம் தனித்தனியாக புகார் அளித்தன. இதன்படி, சி.பி.ஐ., இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஜதின் மேத்தா, மேற்கிந்திய தீவில் உள்ள செயின்ட் கிட்சில் பதுங்கியுள்ளது, தெரிய வந்துள்ளது. அவரை நாடு கடத்துவதற்கான முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜூன்-201907:54:48 IST Report Abuse
Natarajan Ramanathan உலக மகா அயோக்கியன் முன்னால் நிதி அமைச்சரையே இன்னும் கைது பண்ண முடியவில்லை. காசுவாங்கும் அநீதிபதிகள் இருக்கும்வரை இந்தநாட்டில் என்ன ஊழல் வேண்டுமானாலும் பண்ணமுடியும். 2G ஊழலை விடவா? அதிலேயே அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
12-ஜூன்-201904:26:09 IST Report Abuse
blocked user நிதி அமைச்சகத்தில் உள்ள புல்லுருவிகளை வெளியேற்றினால் ஒரு வேலை இது போன்ற மோசடி மன்னர்களை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும்.
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
12-ஜூன்-201910:44:29 IST Report Abuse
pradeesh parthasarathyகடந்த அஞ்சு வருஷமா இதையே சொல்லாகிட்டு இருக்கீங்க ....நீங்களே புல்லுருவகளாக இருக்கும்போது எல்லாவனுகளும் தப்பி செல்ல தான் செய்வான் ......
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
12-ஜூன்-201911:01:54 IST Report Abuse
Darmavanசெக்குக்கும் சிவலிங்கத்துக்கு வித்தியாசம் தெரியாத பிறவிகள் போலீஸ்காரனை புல்லுருவி என்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X