அரசியல் செய்தி

தமிழ்நாடு

"எமர்ஜென்சி': தி.மு.க.,வின் கோபம் யார் மீது?

Updated : ஏப் 24, 2011 | Added : ஏப் 22, 2011 | கருத்துகள் (25)
Share
Advertisement
"இப்போதும் நான் தான் முதல்வரா, என் ஆட்சி நடக்கிறதா என, எனக்கே தெரியவில்லை. தேர்தல் கமிஷன் சாதாரண மக்களையும் துன்புறுத்துகிறது. கட்சிகளின் அன்றாட நடவடிக்கையில் தலையிடுகிறது...' சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு முன், தி.மு.க., தலைவர் கருணாநிதி தேர்தல் கமிஷன் மீது கொண்ட கோபத்தின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆனால், அவரது உண்மையான கோபம், தேர்தல் கமிஷன் மீது அல்ல,

"இப்போதும் நான் தான் முதல்வரா, என் ஆட்சி நடக்கிறதா என, எனக்கே தெரியவில்லை. தேர்தல் கமிஷன் சாதாரண மக்களையும் துன்புறுத்துகிறது. கட்சிகளின் அன்றாட நடவடிக்கையில் தலையிடுகிறது...' சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு முன், தி.மு.க., தலைவர் கருணாநிதி தேர்தல் கமிஷன் மீது கொண்ட கோபத்தின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆனால், அவரது உண்மையான கோபம், தேர்தல் கமிஷன் மீது அல்ல, காங்கிரஸ் மீதுதான் என, அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா ஓய்வு பெறும் முன், அப்பதவியில் நியமிப்பதற்காக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசு தயார் செய்து, மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியது. ஆனால், தமிழக அரசு பரிந்துரை செய்த மூன்று அதிகாரிகளையும் நிராகரித்து, தி.மு.க.,விற்கு முதல் அதிர்ச்சியை அளித்தது மத்திய தேர்தல் கமிஷன். அதோடு, மூன்று அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களது பெயரை பரிந்துரைக்குமாறு கமிஷன் கேட்டுக் கொண்டது. அதன்படி, முதல்வர் கருணாநிதி, மூவரில் ஒருவராக பிரவீன்குமார் பெயரையும் தமிழக அரசின் சார்பில் பரிந்துரைத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை அமைதி காத்த பிரவீன்குமார், தேதி அறிவிக்கப்பட்டவுடன் சாட்டையை சுழற்றத் துவங்கினார்.

இதனிடையே, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட சில நாட்களில், முதல்வரின் மனைவி தயாளு, மகள் கனிமொழி எம்.பி., கலைஞர், "டிவி' நிர்வாக இயக்குனர் சரத் ஆகியோரிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தியதோடு, தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் இயங்கும் கலைஞர், "டிவி' அலுவலகத்திலும் நுழைந்து சோதனை நடத்தியது. ஸ்பெக்ட்ரம், "2 ஜி' வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கலானது. தேர்தல் கமிஷன் விதிமுறைகளை, பிரவீன்குமார் கடுமையாக அமல்படுத்தியதால் தி.மு.க.,வின், "தேர்தல்பணி' கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அழகிரி உட்பட முக்கிய பிரமுகர்களின் கார்களிலும் சோதனை நடந்தது. முக்கிய தி.மு.க., பிரமுகர்களின் வீடுகளில் சோதனை, எம்.பி., ரித்தீஷ் கைது, ஜெ., வேட்புமனு தாக்கலின்போது ஏற்பட்ட மோதலில், தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு என, அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தேறின. தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு பற்றி, திருச்சி போலீஸ் கமிஷனர் வன்னிய பெருமாளிடம் முதல்வர் கருணாநிதி கேட்டபோது, "எல்லாம் சட்டப்படி நடந்துள்ளது' என்ற பதில் கிடைத்ததால் அதிர்ச்சியானது தி.மு.க., வட்டாரம். அதோடு, அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவரின் பஸ்சில், 5.25 கோடி ரூபாய் சிக்கியது நாட்டையே உலுக்கியது.

இது போன்ற சம்பவங்களால், தேர்தல் கமிஷனின் செயல்பாட்டை கண்டித்து, முதல்வர் மேடைக்கு மேடை பேசும் சூழல் ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியின் பதில் அமைந்தது. அவர் கூறும்போது, "பிற மாநில தேர்தல்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் அதிக தேர்தல் விதிமீறல்கள், வழக்கு பதிவுகள் நடந்துள்ளது. தேசிய அளவில் தேர்தல் நடக்கும் நான்கு மாநிலங்களில் பிடிபட்ட, 54 கோடி ரூபாயில், 48 கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்து மட்டும் பிடிபட்டுள்ளது' என்றார். தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என, ஆரம்பத்தில் புரியாமல் திணறிய முதல்வர் கருணாநிதி, இது மத்திய அரசின் யோசனையுடன் நடக்கிறது என்று சந்தேகமடைந்தார். ஒருபுறம் நேரடியாக, சி.பி.ஐ., மூலமும், மற்றொரு புறம் தேர்தல் கமிஷன் மூலமும், தி.மு.க.,வுக்கு "செக்' வைக்கப்படுவதாக உணர்ந்தார். இவ்வளவு பிரச்னையிலும், ஒரு வார்த்தை கூட தேர்தல் கமிஷன் குறித்து டில்லி காங்கிரஸ் தலைமை கண்டிக்காதது அவரது சந்தேகத்தை அதிகமாக்கியது. மத்திய அரசு நினைத்திருந்தால், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டை தளர்த்தியிருக்க முடியும்; ஆனால், அதை செய்யாததன் மூலம், நமக்கு நெருக்கடி கொடுக்கிறது என்று நம்புகிறது தி.மு.க., தலைமை.

இதன் எதிரொலியாக, கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில், "நடப்பது தேர்தல் போல அல்ல; எமர்ஜென்சி காலம் போல உள்ளது' என்று தி.மு.க., தலைவர் ஆவேசப்பட்டார். எமர்ஜென்சியை தேர்தல் கமிஷன் போன்ற அமைப்பு ஏற்படுத்த முடியாது. மத்திய அரசால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்த கருணாநிதி, மத்திய அரசை மறைமுகமாக சாடத்துவங்கினார். மத்திய அரசில் பங்கேற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் தங்களுக்குமான இடைவெளி அதிகரித்து வருவதை கருணாநிதி உணர்ந்திருந்தார். மத்திய அரசையும், காங்கிரஸ் கட்சியையும் இயக்கும் ராகுல், கருணாநிதியுடனான உறவை விரும்பாதது அதற்கு காரணமாக அறியப்பட்டது. அதற்கேற்ப, சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, சோனியாவுடன் மட்டுமே கருணாநிதி பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தமிழகத்தில் பங்கேற்ற கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கவில்லை.

சமீபத்தில் கருணாநிதி, "மே 13ம் தேதி தேர்தல் முடிவு அறிவித்து, 16ம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டுமெனில், எப்படி பல முடிவுகளை எடுக்க முடியும். அரசு அமைப்பதில் எத்தனை பணிகள் உள்ளது' என, மீண்டும் புலம்பியுள்ளார். ஒருவேளை தேர்தல் முடிவில் தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக அமைந்தால், மே 13, 14, 15ம் தேதிக்குள், காங்., - பா.ம.க., ஆகியோரிடம் கூட்டணி ஒப்புதல் பெற்று ஆட்சியை, அமைச்சரவையை அமைத்துவிட முடியுமா என்ற சந்தேகத்தின் வெளிப்பாடு தான் இந்த புலம்பல். "இப்போதாவது ஏதாவது செய்யுங்கள்' என்ற நோக்கில் காங்கிரசுக்கு வேண்டுகோள் விடுப்பது போல் இது அமைந்துள்ளது. தேர்தல் கூட்டணியில் துவங்கிய தி.மு.க., - காங்., மோதல், தேர்தல் முடிவு சாதகமாக அமைந்தாலும், ஆட்சி அமைப்பது வரை தொடரும் என்பதை சிம்பாலிக்காக காங்., கட்சியினர் வெளிப்படுத்தி வருகின்றனர்; தி.மு.க., தலைமையின் கோபத்தையும் ரசித்து வருகின்றனர். எப்படியிருந்தாலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், தேர்தலுக்கு முன்பு நடந்த பரபரப்பு காட்சிகள், தேர்தலுக்கு பின்பும் தொடரும் என்பதை இரு கட்சி வட்டாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
santhosh - mangalore,இந்தியா
23-ஏப்-201111:13:57 IST Report Abuse
santhosh ஜெ மீது
Rate this:
Cancel
sekarvelsamy - Jubail,சவுதி அரேபியா
23-ஏப்-201111:09:54 IST Report Abuse
sekarvelsamy தலைவரே இப்பதான் உங்களுக்கு புரிகிறதா காங்கிரசின் உல் அடி வேலை இது உங்களுக்கு இலங்கையில் போர் நடக்கும் போதே தெரிந்து இருக்க வேண்டும் ஒரு தமிழ் தலைவனாக இருந்தும் தமிழர்கள் கொல்லபடுவதை நிருதமுடியவில்லையே என்று .அப்பொழுது கட்சியை காப்பாற்றுவது தான் உங்கள் நோக்கமாக இருந்தது இப்பம் கட்சிக்கு பிரச்சினை என்பதால் காங்கிரசை குறை கூறுகிறேர்கள் கட்சியை விட தமிழனின் உயிர் பெரிதாக தோன்றவில்லையா? இப்பம் நீங்கள் வருந்துவது எங்களுக்கும் வருத்தமாக உள்ளது. நீங்கள் காங்கிரசை மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் வரும் மே 13 அன்று தெரியும்.
Rate this:
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
23-ஏப்-201110:28:39 IST Report Abuse
sundaram மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. மக்களோட உணர்வுகளை புரிஞ்சவன் தான் மன்னன். அதுபோல மன்னனை புரிந்து கொண்டு தான் மக்கள். அதுனால, "இப்போது நான்தான் முதல்வராக இருகிறேனா, என் ஆட்சிதான் நடக்கிறதா" என்ற உங்களது சந்தேகம் உங்களுக்கு மட்டும் வரவில்லை, இன்னும் மாக்களாகாம மக்களாகவே இருக்கும் எங்களுக்கும் வரத்தான் செய்யுது, என்ன செய்யுறதுன்னு தான் தெரியலை. உங்களுக்கு இந்த மாதிரி சந்தேகம் வரும்போது சினிமா ஷூட்டிங் இல்லாட்டி ஏலகிரி மலையேருவீங்க, அதுவும் இல்லாட்டி குஷ்பூ அக்கா கூட கட்சி பணிகள் பத்தி விவாதிக்க போயிடுவீங்க. ஆனா, நாங்க என்ன செய்யுறதுன்னுதான் புரியலை.மதுரை பக்கம் (கொஞ்சம் பயந்துகிட்டேதான்) காலாற நடந்தா தென்மண்டலம் தான் முதல்வரு மாதிரி தோணுது. வடக்க வந்தா இளைய தளபதி முதல்வர் மாதிரி தெரியுது. ரெண்டுக்கும் நடுப்பற பார்த்தா, உங்களுக்கு "ஒண்ணும் தெரியாத பெரிசு"ன்னு பட்டம் கொடுத்த கனி தான் முதல்வி மாதிரி தெரியுது. உங்க நடவடிக்கை எல்லாம் பாத்தா மானாட மயிலாட கலைஞர் டி வி புகழ் தாயாளு தான் முதல்வியா இருக்காங்களோன்னு ஒரு சந்தேகமும் அவருது. மனைவி முதல்வின்னு நெனைக்கும்போது நம்ம வோல்டாஸ் பில்டிங் குறுக்க வந்து துணைவிதான் முதல்வி, சட்டமன்றம் இப்போவெல்லாம் சி. ஐ.டி காலனிலேந்துதான் இயங்குது போல வெளிச்சமா தெரியுது. மொத்தத்துல தமிழ்நாட்டுல முதல்வர் யாருங்கற சந்தேகத்துல நீங்களும் மக்களும் நூத்துக்கு நூறு ஒத்துப் போறீங்க. பால்கனி பாவைக்கு கூட வராத சந்தேகம் உங்களுக்கும் மக்களுக்கும் வந்திருச்சு. போவுது உடுங்க. எப்படியோ சந்தேகத்தோடயே அஞ்சு வருசத்த ஓட்டிபுட்டோம், இன்னும் இருபது நாளு ஓட்டறதா கஷ்டம்? தன்னால சந்தேகம் தீந்துடும். கவலை படாதீங்க. வேணும்னா ஒண்ணு செய்யலாம், நம்ம வாடகை கவிஞர் இல்லாட்டி பாலமன் சாப்பையா தலைமையில "கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக முதல்வராக பணியாற்றியது யார்? ன்னு ஒரு கவி அரங்கம் அல்லது பட்டி மன்றம் நடத்தலாம். முடிவுல திரை உலகத்தினர் சார்பா இதயத்துக்கு ஒரு பாராட்டு விழா வச்சுடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X