பொது செய்தி

தமிழ்நாடு

மணிக்கூண்டு கோபுரத்தை புதுப்பிக்குமா மாநகராட்சி?

Added : ஜூன் 12, 2019
Share
Advertisement
பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும், தங்கச்சாலை மணிக்கூண்டு கோபுரத்தை, புதுப்பித்து இயக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.சென்னை, தங்கச் சாலையில், 60 அடி உயரம் உடைய, மணிக்கூண்டு கோபுரம் உள்ளது. இந்த கடிகாரம், 19ம் நுாற்றாண்டில், 'சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி' என அழைக்கப்படும், 'கனி அண்டு சன்ஸ்' உருவாக்கினர். கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க முகப்பும்,

பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும், தங்கச்சாலை மணிக்கூண்டு கோபுரத்தை, புதுப்பித்து இயக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.சென்னை, தங்கச் சாலையில், 60 அடி உயரம் உடைய, மணிக்கூண்டு கோபுரம் உள்ளது. இந்த கடிகாரம், 19ம் நுாற்றாண்டில், 'சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி' என அழைக்கப்படும், 'கனி அண்டு சன்ஸ்' உருவாக்கினர். கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க முகப்பும், அலுமினியத்தால் ஆனது.இந்த கடிகாரம், பல ஆண்டுகள் இயங்காமல் இருந்ததால், சென்னை மாநகராட்சி, 2014, ஜனவரியில், பி.ஆர்.ஓ., அண்டு சன்ஸ் உடன் இணைந்து, மணிக்கூண்டை புதுப்பித்து இயக்கியது. பின், சில மாதங்களில், மீண்டும் இயங்காமல் போனது.

எனவே, பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் மணிக்கூண்டை, மாநகராட்சி மீண்டும் புதுப்பித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.சென்னையில் தனித்து நிற்கும், ராயப்பேட்டை, டவுட்டன், புளியந்தோப்பு மணிக்கூட்டு கோபுரங்கள் வரிசையில், இதுவும் ஒன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X