கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ைஹட்ரோ கார்பனுக்கு எதிராக மனிதச் சங்கிலி வேறு தேதியில் நடத்த நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூன் 12, 2019
Advertisement

மதுரை : 'ைஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இன்றைக்குப் பதிலாக ஜூன் 23 ல் மனிதச் சங்கிலி நடத்த கூடுதல் டி.ஜி.பி. பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ைஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை இன்று (ஜூன் 12) மனிதச் சங்கிலி நடத்த பேரிழப்பிற்கு எதிரான பேரியக்கம் அறிவித்தது. இதற்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.இதன் ஒருங்கிணைப்பாளர் லெனின் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் 'மனிதச் சங்கிலிக்கு அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

பா.ஜ. வழக்கறிஞர் அணி மாநில துணைத் தலைவர் ஜெயசிங் 'மனிதச் சங்கிலிக்கு அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். திட்டத்திற்கு மத்திய காங். ஆட்சியின்போது கையெழுத்தானது. தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.தலைவர்கள் தேவையின்றி பா.ஜ.விற்கு எதிராக அறிக்கை விடுகின்றனர். வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக இணைத்து கருத்தை கேட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என மனு செய்தார்.நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.அரசுத்தரப்பில் 'மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அதில் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது. மனுதாரர் அனுமதிகோரி காவல்துறையில் மனு அளித்த குறுகிய காலத்தில் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இன்று நடத்த அனுமதித்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாது' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி உத்தரவுவேறு தேதியில் அதாவது ஜூன் 23ல் மனிதச் சங்கிலி நடத்த அனுமதிக்க மனுதாரர் தரப்பு கோரியுள்ளது. மனுதாரர் ஜூன் 14 க்குள் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யிடம் மனு அளிக்க வேண்டும். அதை ஜூன் 18 க்குள் பரிசீலித்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு மனிதச் சங்கிலிக்கு அனுமதிக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X