கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்துக் கழகஅதிகாரி ஆஜராக உத்தரவு

Added : ஜூன் 12, 2019
Advertisement

மதுரை : மதுரை மீனாட்சி நகர் கண்ணாயிரம். அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருக்குரிய சம்பள நிலுவையை 1999 ஜன.1 லிருந்து கணக்கிட்டு போக்குவரத்துக் கழக நிர்வாகம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றக் கிளை மற்றும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தன.மதுரை போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மீது கண்ணாயிரம் உயர்நீதிமன்றக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு: ஏற்கனவே மதுரை போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆஜராகி மனுதாரருக்குரிய தொகை 3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் உறுதியளித்துள்ளார். அதை நிறைவேற்றவில்லை. அவர் ஜூன் 17ல் ஆஜராக வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X