சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சை பேச்சு; இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (7)
Advertisement
pa ranjith,ரஞ்சித்,வழக்கு,ராஜராஜ சோழன்

தஞ்சாவூர் : மன்னன் ராஜராஜ சோழன் குறித்து இழிவாகப் பேசியதாக, திரைப்பட இயக்குனர், ரஞ்சித் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர், திருப்பனந் தாளில், நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர், உமர் பாரூக்கின் நினைவு நாள் பொது கூட்டம், 5ம் தேதி நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர், ரஞ்சித் பேசியதாவது: டெல்டாவில், ஜாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. மன்னர் ராஜராஜ சோழன் காலம் தான், பொற்காலம் என்பர். ஆனால், ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான், இருண்ட காலம் என, நான் சொல்கிறேன்.

எத்தனையோ பேர் சொல்றாங்க. ராஜராஜ சோழன், எங்கள் ஜாதி என்று. சத்தியமாக சொல்றேன்; ராஜராஜ சோழன், என் ஜாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில், எங்களது நிலம் பறிக்கப்பட்டது, ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் தான்.ஜாதி ரீதியாக, மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது, அந்த ஆட்சிக்காலத்தில் தான். இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. ரஞ்சித் மீது, ஹிந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர், பாலா, திருப்பனந்தாள், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளைத் துாண்டுதல், கலகம் செய்யும் வகையில் பேசுவது என, இரண்டு பிரிவுகளில், ரஞ்சித் மீது, நேற்று திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
12-ஜூன்-201911:12:11 IST Report Abuse
Girija இந்த பா என்று இனிஷியல் போட்டு கொண்டு முன்பு ஒரு கவிஞர் லாட்டரி கும்பலுடன் ஆலமர அரசியல் குடும்பத்துடன் ஆட்டமாக ஆடினார், இது இன்னும் கட்சியே ஆரம்பிக்காத டவாலி யின் வேலை
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
12-ஜூன்-201909:57:46 IST Report Abuse
prakashc ஜாதி பேரால் சம்பாதிக்க திருமா , இப்ப இந்த ரஞ்சித்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-ஜூன்-201909:48:01 IST Report Abuse
A.George Alphonse Why this man is unnecessarily interfering in our Golden history of Cherans,Chozhans and Pandians and poking his nose and facing court cases.Let this film producers and directors try to earn money by taking love and romantic cenimas in order to earn money at present.The Golden History of our India is a vast subject and don't have any like ocean."Thadi Edutheven Ellam Thandakkaran Aaga Mudindhadhu" and no one can tell any conclusion for our Indian history through out the world.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X