சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் ஆக்கிரமிப்பு பெயரில் குப்பை அகற்றிய நகராட்சி

Added : ஜூன் 12, 2019
Share
Advertisement
 சிவகங்கையில் ஆக்கிரமிப்பு பெயரில் குப்பை அகற்றிய நகராட்சி

சிவகங்கை:சிவகங்கையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி ரோட்டை ஆக்கிரமித்திருந்த பழம் மற்றும் தள்ளுவண்டி, பெட்டிக்கடைகளை நகராட்சியினர் அகற்றினர்.

சிவகங்கையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் வெளியூர் வாகனங்கள் நிறுத்த போதிய பார்க்கிங் வசதியின்றி, ரோட்டோர கடைகள் ஆக்கிரமித்திருந்தன. மேலும் பஸ் ஸ்டாண்ட் முன் தற்காலிக ெஷட் அமைத்து பழக்கடைகள், பூக்கடைகள் புற்றீசல் போல் பெருகி விட்டன. இக்கடைகளால் நகராட்சிக்கும் வருவாய் கிடைப்பதில்லை.

கடைகள் ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, போலீசார் கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர். கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவுபடி சிவகங்கையில் நேற்று ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி கமிஷனர் அயூப்கான், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒரு பகுதியில் முடிந்து செல்வதற்குள் மீண்டும் கடைகளை ஆக்கிரமிக்க துவங்கினர். இதனால் நேற்று நடந்த ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பாகவே காணப்பட்டது. மொத்தத்தில் நகராட்சியினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ரோட்டில் கடைக்காரர்களால் தேக்கி வைத்திருந்த குப்பையை தான் லாரிகளில் அள்ளிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X