பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட வரன்முறை திட்டத்தை மீண்டும் நீட்டிப்பதில் சிக்கல்

Added : ஜூன் 12, 2019
Advertisement

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை திட்டத்தை, மீண்டும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், கட்டட உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 2007 ஜூலை, 1க்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைபடுத்த, நகர், ஊரமைப்பு சட்டத்தில், 113 - சி என்ற, புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, கட்டட வரன்முறை திட்டத்தை, தமிழக அரசு, 2017 ஜூன், 22ல் அறிவித்தது.இந்த திட்டத்தில், வரன்முறை கட்டணங்கள், ஆன்லைன் முறையில் மதிப்பிடப்படுகின்றன.

இவ்வாறு நிர்ணயிக்கப்படும் தொகை, மிக அதிகமாக இருப்பதாக கூறி, கட்டட உரிமையாளர்கள், வரன்முறை கோரி, விண்ணப்பிக்க தயங்குகின்றனர். மேலும், அதிகபட்ச கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தாலும், நீதிமன்ற தடை காரணமாக, அதிகாரிகள் இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இந்த திட்டம் யாருக்கும் பயன் இல்லாததாக உள்ளது.இத்திட்டத்தில், கட்டட வரன்முறை கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஜூன், 21ல் நிறைவடைகிறது. ஏற்கனவே, மூன்று முறை நீட்டிப்பு வழங்கப்பட்டது போல, மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படும் என, கட்டுமான துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, நகர், ஊரமைப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கட்டட வரன்முறை திட்டத்துக்கு, மீண்டும் நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்திய கூறுகள், மிகவும் குறைவு. இத்திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து, அரசுக்கு தெரிவித்துள்ளோம். திட்டத்தை, மேலும், சில மாதங்களுக்கு நீட்டிப்பதா அல்லது அதற்கு மேல், குறிப்பிட்ட அளவுக்கு அபராதம் விதித்து, விண்ணப்பங்களை பெறுவதா என்பது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X