அரசியல் செய்தி

தமிழ்நாடு

உண்ணாவிரதத்தை கபடநாடகம் என விமர்சிப்பதா? ஜெ.,வுக்கு கருணாநிதி கண்டனம்

Added : ஏப் 22, 2011 | கருத்துகள் (92)
Share
Advertisement
சென்னை: ""இலங்கையில் போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் அங்கு சென்று வந்ததையும் ஜெயலலிதா தேவையில்லாமல் குறைகூறியுள்ளார்'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவரது கேள்வி-பதில் அறிக்கை: கேள்வி: இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க
உண்ணாவிரதத்தை கபடநாடகம் என விமர்சிப்பதா? ஜெ.,வுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: ""இலங்கையில் போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் அங்கு சென்று வந்ததையும் ஜெயலலிதா தேவையில்லாமல் குறைகூறியுள்ளார்'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவரது கேள்வி-பதில் அறிக்கை:


கேள்வி: இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வக்கீல் தலைமையில் விசாரணை கமிஷனை ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் அமைந்தார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது குறித்து கருத்து என்ன?


பதில்: கடந்த ஒன்பது மாதங்களாக நடந்த விசாரணை அறிக்கை இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தபோதும் அதில் முக்கிய பகுதிகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பலரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அறிக்கைவிட்டுள்ள ஜெயலலிதா வழக்கம்போல், தேவையில்லாமல், போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் இலங்கை சென்று வந்ததை குறைகூறியும், ஒரு அநாகரிகமான, அவருக்கே உரிய நடையில் தெரிவித்துள்ளார்.


கேள்வி: நான்கு வெளிநாட்டுக்காரர்கள் சென்னை வந்திருப்பதாகவும், அவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யப்போவதாகவும் சுப்பிரமணியசாமி ஒரு தகவலை கூறியிருக்கிறாரே?


பதில்: இதற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்குதான் உள்ளது. இந்த செய்தியில் தவறு இருப்பின், அடிக்கடி இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி பீதியில் ஆழ்த்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையாவது எடுக்க முன்வரவேண்டும்.


கேள்வி: புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை மேலும் மேலும் மோசமாகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகிறதே?


பதில்: தமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் புட்டபர்த்தி சாய்பாபா ஆழ்ந்த அன்பு கொண்டவர். தனிப்பட்ட முறையில் என் மீதும் பாசம் கொண்டவர். அவர் உடல்நிலை குறித்து வந்துள்ள செய்திகளை அன்றாடம் மிகுந்த கவலையோடு படித்து வருகிறேன். சாய்பாபா உடல் நலம் தேறுவதற்கு பிராத்தனை செய்யும் பக்தர்களின் நம்பிக்கை வெற்றி பெற நானும் உளமாற வேண்டுகிறேன்.


Advertisement


வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh - tirupur,இந்தியா
23-ஏப்-201111:29:32 IST Report Abuse
rajesh தமிழை வைத்தும் ,தமிழர்களை வைத்தும் ஒருவன் எப்படி வாழ்வில் உயர முடியும் என்பதற்கு ஒரு வாழும் சாட்சி மு.க அவர்கள்தான் ..ஒரு இனமே வீழ்த்த பட்டு ,கொலை குற்றங்கள்,கற்பழிப்புகள் ,மனித உரிமை மீறல்கள் அனைத்திற்கும் சாட்சியங்கள் இருக்கும் போதும் ........உண்ணாவிரதம் என்னும் பெயரில் தமிழினத்தலைவர் என்று கூறிக்கொள்ளும் மு.க. 4 மணிநேரத்தினை வீணடித்து உள்ளார் .அந்த மணித்துளிகளில் தமிழ் மக்களை காக்கும் எண்ணம் இருந்தால் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதிக்கப்படும் செயல்களை மேற்கொண்டு இருக்கலாம்.எல்லா செயல்களிலும் விளம்பர பறைசாற்றும் உமது ஆசை இன்று வரலாற்றில் உமது பெயர் இடம்பெறுகிறது " தமிழின துரோகி என்று " ..இதனை நம் தமிழ் மக்கள் கூறி இருந்தால் நீங்கள் எவ்வாறு வசை பாடுவீர்கள் என்று அனைவருக்கும் தெரியும்..சொல்வது நம் தொப்புள் கொடி உறவுகள் .. நெஞ்சுக்கு நீதி யை உமது மனசாட்சி கொண்டு கேட்டு பாருங்கள் அய்யா ! ! ! நீங்கள் பதவிக்காக ஆடிய நாடகமா ? இல்லை உண்ணாவிரதமா ? என்று ....இறுதிகட்டப் போரில் இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாருங்கள் அய்யா.....அண்ணா,பெரியார் என்று பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்த மாணவன் என்று கூறிக்கொள்பவரே உங்கள் பகுத்தறிவில் இது எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? அன்பு உடன்பிறப்பே ! தம்பி ! ! ! அண்ணா ,பெரியார் ,பகுத்தறிவு,தமிழ்,தமிழ் இன போராட்டம் ,திராவிடம் என்று அனைத்தையும் கூறி தமிழையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி உள்ளீர்கள் .ஹிந்தி கற்க விடாமல் ஒரு தலைமுறையும் ,ஒரு இனத்தை காக்கும் வாய்ப்பு இருந்தும் அதனை செய்ய இயலாமல் விட்ட நீங்கள் சுயநலத்தின் மொத்த உருவமாய் மட்டும் இந்த தமிழ் வரலாறு உங்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் ...
Rate this:
Cancel
S N Vel - Surat,இந்தியா
23-ஏப்-201111:08:47 IST Report Abuse
S N Vel உண்ணாவிரதத்தை கபடநாடகம் என விமர்சிப்பதா? ஜெ.,வுக்கு கருணாநிதி கண்டனம் # வீட்டில் சண்டை போட்டுகொண்டு மூன்று மணி நேரம் இருப்பதா உண்ணாவிரதம்.. ?? இதனால் உங்களால் என்ன சாதிக்க முடிந்தது... உண்ணாவிரதத்தால் குறைந்தபட்ற்ற நோக்கத்தையாவது அடைய முடிந்ததா?? #அண்ணா ஹசாரே பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்..
Rate this:
Cancel
Krish - India,சிங்கப்பூர்
23-ஏப்-201111:05:44 IST Report Abuse
Krish கருணாநிதி, நீர் உண்ணா விரதம், தமிழ் புத்தாண்டு, அமைதி பூங்கா, ஊழல், நல்லரசு - இதுக்கெலாம் புது அர்த்தம் உருவாக்க நினைகிரீர். இந்த 180 Minutes உண்ணாவிரதத்தினால் உங்கள் பெயர் Guiness புத்தகத்தில் இடம் பேரவேண்டும் - "World's Fastest Fasting". ஏன் - புத்தகம் கூட வெளியிடலாம் - "Learn how to fast the Fast ". ஆங்கிலத்தில் அதற்க்கு Fasting என்று சொல்வார்கர், அதனால் தான் அதை சீக்கிரம் முடித்து விட்டேன் என்று உங்கள் கணீர் குரலில் கூறுங்கள் இல்ல ஒரு படம் மூன்று மணி நேரம் தான் ஓடும், அதனால் தான் நானும் 3 மணி நேரம் உண்ணாவிரதம் படம் காண்பித்தேன், இதுவே என் கலை சேவை என்று சொல்லுங்கள். மத்திய அரசில் கூட்டணி, நீங்கள் என்ன எதிர் கட்சியா உண்ணாவிரதம் இருக்க? இது கபட நாடகம் இல்லாம கலைஞர் டிவி நாடகமா? உங்க பிட் அந்து ரொம்ப வருஷம் ஆச்சு. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் குடும்பஸ்தன், வேலைக்கு செல்லும் இளைஞர் கூட்டம் - காலை உணவு என்று ஒன்று கிடையாது. நேரா மத்திய உணவு தான், தினம் தினம் குடும்பத்திற்காக உண்ணாவிரதம் தான். உழைத்து சம்பாதிக்கும் மக்களின் இந்த ஒரு வேளை பட்டினி, உங்கள் Fastest Fasting ஐ விட பல மடங்கு புனிதம். இன்றுவரை, இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு நல்ல உணவு, வீடு, பாதுகாப்பு என்று எதுவும் இல்லை, உங்களுக்கு அதெல்லாம் பற்றி கவலை இல்லை, கூட்டணியில் எதற்கு தொல்லை - அப்படி தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X