உண்ணாவிரதத்தை கபடநாடகம் என விமர்சிப்பதா? ஜெ.,வுக்கு கருணாநிதி கண்டனம் - Jayalalitha | Karunanidhi comment against Jayalalitha | Dinamalar

உண்ணாவிரதத்தை கபடநாடகம் என விமர்சிப்பதா? ஜெ.,வுக்கு கருணாநிதி கண்டனம்

Added : ஏப் 22, 2011 | கருத்துகள் (92)
சென்னை: ""இலங்கையில் போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் அங்கு சென்று வந்ததையும் ஜெயலலிதா தேவையில்லாமல் குறைகூறியுள்ளார்'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவரது கேள்வி-பதில் அறிக்கை: கேள்வி: இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க
உண்ணாவிரதத்தை கபடநாடகம் என விமர்சிப்பதா? ஜெ.,வுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: ""இலங்கையில் போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் அங்கு சென்று வந்ததையும் ஜெயலலிதா தேவையில்லாமல் குறைகூறியுள்ளார்'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவரது கேள்வி-பதில் அறிக்கை:


கேள்வி: இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வக்கீல் தலைமையில் விசாரணை கமிஷனை ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் அமைந்தார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது குறித்து கருத்து என்ன?


பதில்: கடந்த ஒன்பது மாதங்களாக நடந்த விசாரணை அறிக்கை இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தபோதும் அதில் முக்கிய பகுதிகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பலரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அறிக்கைவிட்டுள்ள ஜெயலலிதா வழக்கம்போல், தேவையில்லாமல், போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் இலங்கை சென்று வந்ததை குறைகூறியும், ஒரு அநாகரிகமான, அவருக்கே உரிய நடையில் தெரிவித்துள்ளார்.


கேள்வி: நான்கு வெளிநாட்டுக்காரர்கள் சென்னை வந்திருப்பதாகவும், அவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யப்போவதாகவும் சுப்பிரமணியசாமி ஒரு தகவலை கூறியிருக்கிறாரே?


பதில்: இதற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்குதான் உள்ளது. இந்த செய்தியில் தவறு இருப்பின், அடிக்கடி இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி பீதியில் ஆழ்த்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையாவது எடுக்க முன்வரவேண்டும்.


கேள்வி: புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை மேலும் மேலும் மோசமாகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகிறதே?


பதில்: தமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் புட்டபர்த்தி சாய்பாபா ஆழ்ந்த அன்பு கொண்டவர். தனிப்பட்ட முறையில் என் மீதும் பாசம் கொண்டவர். அவர் உடல்நிலை குறித்து வந்துள்ள செய்திகளை அன்றாடம் மிகுந்த கவலையோடு படித்து வருகிறேன். சாய்பாபா உடல் நலம் தேறுவதற்கு பிராத்தனை செய்யும் பக்தர்களின் நம்பிக்கை வெற்றி பெற நானும் உளமாற வேண்டுகிறேன்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X