கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இந்தியன் வங்கி கடனில் முறைகேடு மாஜி தலைவருக்கு 3 ஆண்டு சிறை

Added : ஜூன் 12, 2019
Advertisement

சென்னை : கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக, இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட, ௧௭ பேருக்கு, தலா, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கடந்த, ௧௯௯௫ மற்றும், ௯௬ம் ஆண்டுகளில், சென்னையில் உள்ள, ஏழு தனியார் நிறுவனங்களுக்கு, இந்தியன் வங்கி கிளைகள் வழியாக, ௩௦ கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள, இந்தியன் வங்கியின் ஆறு கிளைகள் வாயிலாக, இந்த கடன் தொகை வழங்கப்பட்டது. கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, சி.பி.ஐ.,க்கு தகவல் வந்தது.இதையடுத்து, இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கிளை மேலாளர்கள், ஏழு நிறுவனங்களின் உரிமையாளர்கள் என, ௨௭ பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணையின் போது, மூன்று பேர் இறந்து விட்டனர்.இந்த வழக்கை, சென்னையில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் விசாரித்தார். இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட, ௧௭ பேருக்கு, தலா, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பு அளித்தார்; ௧௦.௯௦ லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X