ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு உயர் நீதிமன்றம் ரத்து | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு உயர் நீதிமன்றம் ரத்து

Added : ஜூன் 12, 2019

சென்னை, : கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த ௨௦௧௩ல் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது; தரகர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் இருந்து விடுவிக்க தரகர்களிடம் பணம் பெற்றதாக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வழக்கில் சம்பத்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 'மெமோ' வழங்கப்பட்டது.

இதை ரத்து செய்யக் கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் சம்பத்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் 'கியூ பிரிவு எஸ்.பி. யாக பணியாற்றினேன். போலி பாஸ்போர்ட் வழக்கை விசாரிக்கும் போது கிரிக்கெட் சூதாட்ட பின்னணியை கண்டுபிடித்தேன். எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன; உள்நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. '

இம்மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் பி.டி.ஆஷா அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மாநில உள்துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி பெறாததால் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மெமோவை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முறையான அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X