பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்க கருத்தரங்கில் அரூர் பெண்

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
அமெரிக்க கருத்தரங்கில் அரூர் பெண்

அரூர்: அமெரிக்காவில் நடந்து வரும் கருத்தரங்கில், தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த பெண் பிரதிநிதி பங்கேற்றுள்ளார்.

இந்தியாவில், தலித், பழங்குடியின மக்களின் நிலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, அமெரிக்க அரசு சார்பில், 22 நாட்கள் சிறப்பு கருத்தரங்கு, 1ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்க, பழங்குடியின மற்றும் தலித் செயல்பாட்டாளர்கள், கள ஆய்வாளர்கள் என, இந்தியாவில் இருந்து, ஏழு பேர் தேர்வாகியுள்ளனர். இதில், ஆறு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களில், தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த தலித் பெண் செயற்பாட்டாளர் புத்தமணி, 41, என்பவரும் அடக்கம். இவர், 15 ஆண்டுகளாக, பெண்கள் முன்னேற்றம், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், பழங்குடியின மற்றும் தலித் மக்கள் நலனுக்காகவும் போராடி வருகிறார்.

புத்தமணி கூறியதாவது: அமெரிக்க அரசு, இந்தியாவில் இருந்து, பழங்குடி, தலித் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஏழு பேரை தேர்வு செய்து, 22 நாட்கள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், என்னையும் தேர்வு செய்துள்ளனர். கருத்தரங்கு மட்டுமின்றி, வாஷிங்டன், மிசிசிபி, பென்சில்வேனியா போன்ற பகுதிகளில் விளக்க பயிற்சியும் நடக்கவுள்ளது. மேலும், செவ்விந்திய பழங்குடிகளுடன் கலந்துரையாடலும் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N ANAND KUMAR - MADURAI,இந்தியா
12-ஜூன்-201920:42:05 IST Report Abuse
 N ANAND KUMAR செவ்விந்திய பழங்குடி மக்களை அழித்து ஒலித்த அமெரிக்கா இந்த கருத்தரங்கை நடத்துவது வேடிக்கையாக irukirathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X