நிபா வைரஸ் அறிகுறி ஜிப்மரில் ஒருவர் அட்மிட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நிபா வைரஸ் அறிகுறி ஜிப்மரில் ஒருவர் அட்மிட்

Added : ஜூன் 12, 2019
Share

புதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், நிபா வைரஸ் அறிகுறியுடன் சேர்ந்த கடலுாரை சேர்ந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. புதுச்சேரி பிராந்தியமான மாகி, கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ளதால், நிபா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதால், மாகி எல்லையில் சுகாதார துறையினர் மூலம் தீவிர பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.புதுச்சேரி சுகாதாரத்துறை மூலம், அங்குள்ள அரசு மருத்துமவனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, டாக்டர்கள், நர்சுகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் கோரிமேடு அரசு காசுநோய் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கேரளாவில் பணிபுரிந்துவரும் கடலுாரை சேர்ந்த 53 வயதுடைய நபர், கடும் காய்ச்சல் காரணமாக, கடந்த 10ம் தேதி, ஜிப்மர் மருத்துவனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் கேரளாவில் பணிபுரிவதால், நிபா வைரஸ் தாக்கியிருக்கலாம் என சந்தேகமடைந்து, சோதனை மேற்கொண்டனர். அப்போது அதற்கான அறிகுறிகள் சில தென்படுவதால், நிபா வைரஸ் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், அவருக்கு நிபா வைரஸ் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது, அதன் முடிவுக்கு பிறகே உறுதிபடுத்த முடியும் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X