புதுச்சேரி பிஷப் அலுவலகத்தில் ஆசிரியர் தீக்குளிக்க முயற்சி

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுச்சேரி:பணியிட மாறுதலுக்காக புதுச்சேரி பிஷப் அலுவலகத்தில் ஆசிரியர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்தவர் புஷ்பராஜ்,52; இவர் கடலுாரில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். தனது உடல் நிலையை காரணமாக கூறி, திண்டிவனத்தில் உள்ள நிதியுதவி பள்ளிக்கு இடமாறுதல் கேட்டுள்ளார்.அவரின் பதவி உயர்வை கருத்தில் கொண்டு, புதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட நிர்வாகம் தரப்பில் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பிஷப் அலுவலகத்திற்கு வந்த ஆசிரியர் புஷ்பராஜ், தனக்கு பணியிட மாறுதல் வேண்டும் என அங்குள்ள பாதிரியார்களிடம் முறையிட்டுள்ளார்.அதற்கு அவர்கள் சில காரணங்களை கூறி மறுத்த நிலையில், வேறு வழியின்றி பிஷப்பை சந்திக்க சென்ற அவர், மன உளைச்சலில் திடீரென தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அவரை, அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து, அவரை வெளியே அழைத்து வந்தனர்.தகவலறிந்த பெரியக்கடை போலீசார், விரைந்து சென்று, தீக்குளிக்க முயன்ற ஆசிரியரை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக மறை மாவட்ட நிர்வாகத்திடம் விசாரித்து, புகாரை பெற்ற போலீசார், ஆசிரியர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-201919:01:59 IST Report Abuse
தமிழ்வேல் எதுக்கெடுத்தாலும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X