பொது செய்தி

இந்தியா

சாலையோர மரங்களில் பிரதிபலிப்பான் பொருத்தப்படுமா?

Added : ஜூன் 12, 2019
Advertisement

நெட்டப்பாக்கம்:ஏம்பலம் நத்தமேடு-பாக்கம் கூட்ரோடு வரை சாலையோர புளிய மரம், பனை மரத்தில் பிரதிப்பலிப்பான் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியிலிருந்து ஏம்பலம் வழியாக மடுகரை, கரையாம்புத்துார் பகுதிக்கு தினமும் பஸ், கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. போக்குவரத்து மிகுந்த சாலையில் ஏம்பலம் நத்தமேடு பகுதியிலிருந்து பாக்கம் கூட்ரோடு வரை சாலையோரத்தில் ஏராளமான புளிய மரங்கள் மற்றும் பனை மரங்கள் உள்ளது. இரவில் இவ்வழியே வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையோரத்தில் மரங்கள் இருப்பது தெரியாமல், மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன்பு ஏம்பலம் மற்றும் மணக்குப்பத்தில் இரவில்பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர், சாலையோர மரத்தில் மோதி இறந்தது குறிப்பிடத்தக்கதது.ஆகையால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஏம்பலம்- நத்தமேடு கிராமத்திலிருந்து பாக்கம் கூட்ரோடு வரை சாலையோர மரங்களில் பிரதிப்பலிப்பான் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X