பொது செய்தி

இந்தியா

திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா

Added : ஜூன் 12, 2019
Advertisement
 திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா

காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் நேற்று முன்தினம் இரவு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.சனி பரிகார ஸ்தலமான திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. தினம் விநாயகர், சுப்ரமணியர், அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு உற்சவ வீதியுலா,செண்பகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது.நேற்று முன்தினம் இரவு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை தேர் திருவிழா நடைபெறுகிறது. நாளை 13ம் தேதி சனீஸ்வரர் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி தெப்போற்சவம் நடைபெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X