பொது செய்தி

இந்தியா

மீன்பிடி தடைக்காலம் முடிவதால் தயாராகும் புதுச்சேரி மீனவர்கள்

Added : ஜூன் 12, 2019
Advertisement
 மீன்பிடி தடைக்காலம் முடிவதால் தயாராகும் புதுச்சேரி மீனவர்கள்

புதுச்சேரி:புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம், வரும் 14ம் தேதியுடன் முடிவதால், மீனவர்கள் உற்சாகத்துடன், கடலுக்குள் செல்ல, விசைப்படகுகளுடன் தயாராகி வருகின்றனர்.
கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி அரசின் மீன்வளத்துறை சார்பில், இந்தாண்டு 60 நாள் மீன் பிடி தடை காலம், கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. தடைக்காலம் துவங்கியது முதல், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, சுற்றுபுற மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் துவங்கியதில் இருந்து, தங்களின் விசைப்படகுகள், வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்ளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, விசைப்படகுகள், வலைகளை பழுது பார்த்து, தயார் நிலையில் வைத்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் (14ம் தேதி) மீன்பிடி தடைகாலம் முடிவடைவதால், மீண்டும் மீன்பிடி தொழில் களை கட்ட உள்ளது. இரண்டு மாதமாக ஓய்வெடுத்த மீனவர்கள், உற்சாகத்துடன், 14ம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கின்றனர். அதற்கேற்ப, விசைப்படகுகளை தயார்படுத்தியும், படகுகளில் வலைகளை ஏற்றியும் வருகின்றனர்.மீனவர்கள் கூறுகையில், ''தடைக்காலத்தில், ஆழ்கடலில் மீன்பிடிக்காததால், அதிக அளவில் மீன்கள் உற்பத்தி ஆகியிருக்கும். எனவே, அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற, நம்பிக்கையோடு தயாராகி விட்டோம் என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X