பொது செய்தி

இந்தியா

மீன் ஆராய்ச்சியாளர்கள் கனகன் ஏரியில் ஆய்வு

Added : ஜூன் 12, 2019
Share
Advertisement
புதுச்சேரி:கனகன் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து, அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.திலாஸ்பேட்டை, கனகன் ஏரியில், டேங்க் கிளினிங் வகை மீன்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென செத்து மிதந்தன. துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை முதுநிலை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர்

புதுச்சேரி:கனகன் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து, அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
திலாஸ்பேட்டை, கனகன் ஏரியில், டேங்க் கிளினிங் வகை மீன்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென செத்து மிதந்தன. துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை முதுநிலை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஏரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இறந்து கிடந்த மீன்களை ஆய்வு செய்ததுடன், தண்ணீர் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். அவர்களின் முதற்கட்ட விசாரணையில், அதிக வெப்பம் காரணமாக ஆக்சிஜன் குறைந்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.ஏரியில் பல வகையான மீன்கள் உயிரோடு உள்ள நிலையில், டேங்க் கிளீனர் வகை மீன்கள் மட்டும் செத்து ஒதுங்கியதால், அந்த மீன்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக நேற்று, கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் நேற்று காலை ஏரியில் செத்து கிடந்த மீன்களை எடுத்து ஆய்வு செய்ததுடன், சோதனை கூட ஆய்வுக்கும் எடுத்து சென்றனர். மேலும், புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள், ஏரியில் இறந்து கிடந்த மீன்களை நேற்று இரண்டாவது நாளாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X