வனத்துறையில் பழந்தின்னி வவ்வால்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வனத்துறையில் பழந்தின்னி வவ்வால்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

Added : ஜூன் 12, 2019
 வனத்துறையில் பழந்தின்னி வவ்வால்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

புதுச்சேரி:வனத்துறை பராமரிப்பில் உள்ள காட்டில், பழந் தின்னி வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை சுற்றுலா பயணிகள் ஆர்வமு டன் பார்த்து வருகின்றனர்.
பறக்கக்கூடிய தன்மையை பெற்ற, ஒரே பாலுாட்டி இனம் வவ்வால். இரவில் விழித்து, பகலில் பதுங்கி வாழும் வவ்வால் இனம், கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவருவதாக, பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வவ்வால் இனத்தின் ஒன்றான பழந்தின்னி வவ்வால்கள், புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தையொட்டி, 23 ஏக்கரில் பறந்து விரிந்துள்ள காட்டில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கியுள்ளன. இரவில் இரை தேட சென்றுவிட்டு, காலையில் வந்து இங்கு தங்கிவிடுகின்றன.காட்டை சுற்றுலா பயணிகள் மக்கள் பார்வையிட, சமீப காலமாக அனுமதிக்கப்பட்டு வரும்நிலையில், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள் அதிக அளவில், வனக்காட்டிற்குள் நடைபயணம் செய்து அரிய வகை மரங்களை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில், மக்கள் நடைபயணம் செல்லும் பகுதியிலேயே ஆயிரக்கணக்கில் வவ்வால்கள் மரத்தில் தொங்கியபடி இருப்பதை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இந்த வவ்வால்களுக்கு பொதுமக்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறை ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X